கோபி, மே. 21- கன மழையின் காரணமாக நம்பியூர் அருகே பொதுவழி பாதையின் பாலத்தை வெள்ளம் புரட்டிபோட்டுள்ளது. இதில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போக்குவரத்து இன்றி அவ திக்குள்ளாகி உள்ளனர். ஈரோடுமாவட்டம் கோபி அடுத்த நம்பியூர் அருகே உள்ள ஒழலகோவில் ஊராட்சிக்குட்பட்ட கரிச்சிபாளையம் பகுதியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. இதில், மேற்காலதோட்டம் பகுதியில் தடுப்பணையை கடந்து செல்ல கடந்த சில வருடங்களுக்கு முன் கட்டப் பட்ட தற்காலிக வழிதடத்தில் வெள்ளம் அதிகளவில் பெருக் கெடுத்து ஓடியது. இது, தற்காலிக பாலத்தின் குழாய்களை புரட்டி போட்டது. இதனால் 15க்கும் மேற்பட்ட குடும்பங் கள் பாதையை கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுபணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல், அப்பகுதியில் தடுப்ணை வெள்ளநீரால் உடைந்தது இதனால் தடுப்பணையில் மழை நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.