districts

img

கடலில் கலக்கும் தண்ணீரை பம்பிங் மூலம் கொண்டு வரத் திட்டம்

திருப்பூர், பிப்.23- மழைக்காலத்தில் கடலில் கலக் கும் தண்ணீரை இலக்கமநாயக்கன் பட்டி ஊராட்சி பகுதியில் இருந்து பம்பிங் மூலமாக கொண்டு வரும் திட்டம் விரைந்து நிறைவேற்றப் படும், என அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி, வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஞாயிறன்று பாசனத்திற்கு தண்ணீரை திறந்து  வைத்தார். முன்னதாக, இந்நிகழ் விற்கு தாராபுரம் வருவாய் கோட் டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் கே.இ.பிர காஷ் முன்னிலை வகித்தார். இதன் பின் அமைச்சர் சாமிநாதன் பேசு கையில், வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து பாசனப் பகுதி களுக்குட்பட்ட 6,043 ஏக்கர் நிலங் கள் பாசனம் பெறும் வகையில், வலது மற்றும் இடது பிரதான கால் வாய் வழியாக 40 மி.கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தண்ணீரை உபயோகித்து இத்துறைக்கு நீர் பங்கீட்டுப்பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வட்டமலைக்கரை ஓடை நீர் தேக்கம், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்தின் கசிவுநீரை நம்பி கட்டப்பட்டது. மழையின் அளவு குறைந்து கசிவுநீரும் குறைந்த கார ணத்தினால் தண்ணீர் இல்லாமல்  இருந்தது. அணையின் கொள்ள ளவை பொறுத்து தண்ணீர் சேமித்து பாசனத்திற்கு திறந்து விடப்படும். அமராவதி அணையில் இருந்து மழைக்காலத்தில் கடலில் கலக்கும் தண்ணீரை இலக்கமநாயக்கன் பட்டி ஊராட்சி பகுதியில் இருந்து பம்பிங் மூலமாக வட்ட மலைக்கரை ஓடைக்கு தண்ணீர் கொண்டு வர திட்ட அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளது. இந்தத் திட்ட அறிக் கையை நிறைவேற்ற அனைத்து நட வடிக்கையும் எடுக்கப்படும், என் றார். இந்நிகழ்வில், திருப்பூர் மாநக ராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர்  இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர்மன்றத் தலைவர் கனியரசி முத் துக்குமார், செயற்பொறியாளர் (நீர் வளத்துறை, வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கம்) ரா.சுப்பிரமணி யன், உதவி செயற்பொறியாளர் கு. நாட்ராயன், உள்ளாட்சி அமைப்பு களின் பிரிதிநிதிகள், பாசன விவ சாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.