தருமபுரி, செப்.8- கவிஞர் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பை வாசித் துக்கொண்டிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் உரையை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கவிஞர் வைரமுத்து செல்போனில் அழைத்து ஆசிரிய ரிடம் பேச வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தருமபுரியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதனன்று மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது, தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறையில் மாணவிகளுக்கு கவிஞர் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பை பார்வையற்ற மாற்றுத்திறனாளி தமிழாசிரியை தமிழ்ச்செல்வி விளக்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, வகுப்பறையில் அமர்ந்து அவரது உரையை கேட்டுக் கொண் டிருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கைப்பேசி யில் கவிஞர் வைரமுத்துவை அழைத்து ஆசிரியையிடம் பேச வைத்தார். ஆசிரியைப் பாராட்டி ஊக்கப்படுத்திய கவிஞர் வைர முத்து, தமிழ்த் தொண்டு தொடருட்டும் என வாழ்த்து தெரி வித்ததோடு, தருமபுரி வரும் போது சந்திப்பதாகவும் உறுதி யளித்தார். இதனால் மனம் நெகிழ்ந்த தமிழ்ச்செல்வி, அமைச் சருக்கு நன்றி தெரிவித்தார்.