திருப்பூர், ஜூலை 11– திருப்பூரில் தொழிற்சாலை, வணிக கட்டி டங்கள் மற்றும் வீடுகள் கட்டுவது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. பனியன் தொழில் நன்றாக நடைபெற்றால்தான் அதைச் சார்ந்து கட்டு மானத் தொழிலும் சிறப்பாக இருக்கும் என்று கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவித்த னர். சிவில் இன்ஜினியர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஜெயராமன், கண்காட்சித் தலைவர் கே. ராதாகிருஷ்ணன், உடனடி முன்னாள் தலை வர் சௌ.ஸ்டாலின்பாரதி உள்ளிட்டோர் திருப்பூரில் கட்டுமானத் தொழில் நிலவரம் குறித்து கூறியதாவது: திருப்பூரில் கட்டுமான இன்ஜினியர் களைப் பொறுத்து, சராசரியாக ஆண்டுக்கு 50 கட்டிடங்கள் வரை கட்டிக் கொண்டிருந்த வர்கள் தற்போது சுமார் 20 கட்டிடங்கள் என்ற நிலையிலும், 20 கட்டிடங்கள் வரை கட்டிய வர்கள் 5 கட்டிடங்கள் கட்டுவது, சுமார் 5 கட்டி டங்கள் கட்டியவர்கள் ஓரிரு கட்டிடங்கள் கட்டுவது என கட்டுமானத் தொழில் வெகு வாக குறைந்துவிட்டது. சொந்தமாக கட்டுமா னத் தொழில் செய்துவந்த சில பொறியாளர் கள் வேலைக்கு போகும் நிலையும் ஏற்பட் டுள்ளது. திருப்பூரில் தொழிற்சாலை, வணிக கட்டி டங்கள் கட்டுவது குறைந்துவிட்டது. வீடுகள் கட்டுவதும் கடந்த காலத்தை விட குறைந்துள் ளது. ஒப்பீட்டளவில் வணிக கட்டிடங்களை விட வீட்டு கட்டிடங்கள் வேலை நடைபெறு கிறது.
கட்டுமானத் தொழில் நெருக்கடியைச் சந் திப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக கட்டுமான மூலப்பொருள்கள் விலைஉயர்வு முக்கிய காரணம். அத்து டன் கல்குவாரி உரிமையாளர்கள் முன்ன றிவிப்பு இல்லாமல் திடீரென ஞாயிறு இரவு அறிவித்து திங்களன்று முதல் வேலைநிறுத் தம் செய்ததால், கட்டுமானத் தொழில் ஸ்தம் பித்தது. ஜல்லி, மண் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. வேலை நிறுத்தம் முடிந்தவுடன் திடீரென யூனிட்டுக்கு ரூ.500 வரை விலை உயர்த்தப்பட்டது. கனிமவளத் துறையில் முந்தைய ஆண்டு ரூ.1200 கோடி நஷ்டம் ஏற்பட்டது. தற்போது ரூ.1600 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது வாக கனிமவளங்கள் அரசின் நேரடி கட்டுப் பாட்டில் இருக்கும்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது. நுகர்வோர்களுக்கு நியாய மான விலையில் மண், ஜல்லி, செங்கல் உள்ளிட்டவை கிடைக்கும். இதேபோல்தான் சிமெண்ட், கம்பி விலைகளும் திடீரென உயர்த்தப்படு கின்றன. அப்போது கட்டுமானத்தில் ஈடுபடு வோர் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே கட்டுமானப் பொருட்கள் விலையை திடீர் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலைப்படுத் துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
மேலும், தமிழ்நாடு கட்டடங்கள் கட்டு வதற்கான விதிமுறைகள் 2019 அறிவிக்கப் பட்டது. இதில், நடைமுறையில் பின்பற்ற முடி யாத சில விதிமுறைகள் உள்ளன. இதனால் கட்டட அனுமதி மற்றும் மின் இணைப்பு பெறு வது முடியாததாக உள்ளது. மிகப்பெரிய வணிக வளாகங்கள் போன்ற கட்டடங்க ளுக்கும், சிறு மளிகை கடை கட்டுவதற்கும் ஒரே மாதிரியான கட்டட விதிமுறை பொருத்தமாக இருக்காது. எனவே நடை முறைக்கு ஏற்றபடி கட்டட அனுமதி, மின் இணைப்பு விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாண்டிச்சேரி பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கிறோம். இதில் விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம். இத்துடன் கட்டிடங்களுக்கான அனுமதி மற்றும் மின் இணைப்பு பெறுவது ஆகியவை யும் கட்டுமானத் தொழில் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளன. தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மணல், கற்கள் கொண்டு செல்வதை கட்டுப்படுத் தினால் இங்கு விலை குறைவதற்கு வாய்ப் புள்ளது. பொதுவாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் நன்றாக நடைபெற்றால் அதைச் சார்ந்து கட்டுமானத் தொழிலும் சிறப்படை யும். ஆனால் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சலுகைகள் கொடுத்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கைவிடப் படுகின்றனர். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நன்றாக நடைபெற்றால்தான் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக கட்டிடங்கள், குடி யிருப்பு கட்டிடங்கள் கட்ட வேண்டிய தேவை ஏற்படும். கட்டுமானத் தொழிலும் நன்றாக நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.