districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு

 கோவை, டிச.10–  பெட்ரோல், டீசல் விலை உயர் விற்கு காரணமான ஒன்றிய அரசை  கண்டித்து சிஐடியு சங்கம் அறை கூவல் விடுத்த 10 நிமிட வாகன நிறுத் தும் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.  சர்வதேச அளவில் தொடர்ந்து கச்சா எண்ணை விலை குறைந்த போதும், இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை ஒன்றிய  அரசு உயர்த்தி வருகிறது. வரி மேல் வரி விதித்து தற்போது பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டி விற் பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை கண் டித்து தமிழகம் முழுவதும் டிசம்பர் 10 ஆம் தேதி பத்து நிமிடம் வாக னத்தை ஆங்காங்கே நிறுத்தி எதிர்ப்பை பதிவு செய்வது என சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறைகூவல் விடுத்தது. இதன்படி, பகல் 12  மணியில் இருந்து 12.10 மணி வரை  பத்து நிமிடம் வாகனத்தை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.  கோவை மாநகரத்தில் 12 பிரதான போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் இந்த வாகன நிறுத்த போராட்டம் எழுச்சியுடன் நடைபெற் றது.

கோவை காந்திபுரம் சிக்னல் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ். கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, சிஐடியு சங்கத் தினர் காந்திபுரம் சிக்னல் மையப் பகுதியில் சரியாக 12 மணிக்கு தங்க ளது வாகனங்களை நிறுத்தினர். இதன் பின் பெட்ரோல், டீசல் விலை உயர் விற்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி னர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.  இதேபோன்று, சிங்காநல்லூர் பகுதியில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமையிலும், வட கோவையில் பொருளாளர் ஆர்.வேலுசாமி தலைமையிலும், 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பொதுமக்கள்  மத்தியில் பெரும் ஆதரவு காணப்பட் டது. குறிப்பாக, சிஐடியுவினர் நடத்திய போராட்டத்தின் முழக்கங் களை கேட்ட வாகன ஓட்டிகள் சிலரும் ஆங்காங்கே தங்களது வாகனத்தை நிறுத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், வாகன நிறுத்தும் போராட்ட இயக்கத்தை தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 22 மையங் களில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாநகரில் ஜங்ஷன் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் நடைபெற்ற வாகன நிறுத்தும் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஐந்து ரோடு பகுதியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள்  ஆர்.வெங்கடபதி, எ.கோவிந்தன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகி யோரும்,  புதிய பேருந்து நிலையத்தில்  சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதய குமார், போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளர் கிருஷ் ஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சாலை போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், சங்ககிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், சீலநாயக்கன்பட்டி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, கொங்க ணாபுரம், ஜலகண்டாபுரம், அஸ்தம் பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி நால்ரோடு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு  நடை பெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், மாவட்டதுணைத் தலைவர் பி.ஆறு முகம், முரளி சண்முகம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டசெயலாளர் எஸ்.கிரைஸா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அரூர் ரவுண்டானாவில் சிஐடியு நிர்வாகி  ரகுபதி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட் ்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு , மாவட்ட செயலாளர்  ஏ.குமார், ஒன்றிய செயலாளர் பி.குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ,  பி.வி.மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்பட்டி பேருந்து நிலை யத்தில் சிஐடியு நிர்வாகி சரவணன் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய  செயலாளர்கள் தனுஷன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சேகர், சி.வஞ்சி, விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் தீர்த்தகிரி, கரும்பு விவசா யிகள் சங்க நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 21 மையங் களில் வாகன நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், எஸ்ஏபி சந் திப்பு, உஷா தியேட்டர் சந்திப்பு, பூலு வபட்டி சந்திப்பு,  வீரபாண்டி பிரிவு உள்பட 17 இடங்களில் சிஐடியு அமைப்பினர் கைகளில் பதாகை களை ஏந்தியவாறு சாலைகளில் முழக் கமிட்டு வாகனங்களை நிறுத்தக் கேட்டுக் கொண்டனர். இதன்படி 12  மணி முதல் திருப்பூர் மாநகரில் ஆயிரக் கணக்கான வாகனங்கள்  10 நிமிட நேரம் நிறுத்தப்பட்டன.  இதேபோல், உடுமலைபேட்டை, மடத்துக்குளம், அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.  திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்ற போராட்டங்களில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கராஜ் உள்பட மாவட்ட நிர் வாகிகள், அந்தந்த சார்பு சங்க நிர்வா கிகள், மாதர், வாலிபர் அமைப்பு களின் நிர்வாகிகள், ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற னர்.

 நீலகிரி 

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங் கிராஸ் காந்தி சிலை அருகில்   சிஐடியு தொழிற்சங்கத்தி னர்  வாகனங்களை நிறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட பொருளா ளர் நவீன் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்   மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ், சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

;