districts

img

கோவை: திமுகவினரை தாக்கிய அதிமுகவினர்

கோவை, பிப்.18-  கோவையில் திமுகவினர் மீது  தாக்குதல் நடத்திய அதிமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி திமுகவி னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக் ்கான வாக்குப்பதிவு சனியன்று நடை பெற இருக்கின்றது. இச்சூழலில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு பெருகி வருவதால் அதிமுகவினர் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி யினருடன் அதிமுகவினர் தகறா ரில் ஈடுபடும் சம்பவங்கள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரு கின்றன.  இந்நிலையில், கோவை மாநக ராட்சி 100 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள திமுக அலுவல கத்திற்குள் அதிமுகவினர் அத்து மீறி புகுந்து தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலில் திமுக  பிரமுகர்கள் 2 பேர் காயமடைந்த னர். அவர்கள் கோவை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, திமுகவினர் மீது  தாக்குதல் நடத்திய அதிமுக வேட் பாளர் வேணுகோபால் உள்ளிட் டோர் மீது வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக கோவை கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நூற்றுக்கும் மேற் பட்ட திமுகவினர் போத்தனூர்  காவல் நிலையம் முன்பு சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையி னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.