districts

img

கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்

சேலம், செப்.11- எண்ணும் எழுத்தும் திட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்று செல்வதாகவும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் கொட்டும் மழையி லும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பள்ளி கல்வித்துறையில் கொண்டு வந் துள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தை  கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை முற்றிலும் கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை நடுநிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு  தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சந்திர சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் நா.பெரிய சாமி மாநில மகளிர் அணி செயலாளர் தி. சண்முகவடிவு உள்ளிட்டோர் உரையாற்றி னர்.