தருமபுரி, ஆக.16- டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குமாறு சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 11ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்த பேரவைக் கூட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் என்.இராக்கன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராசன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் வி.ஜெயராமன், பொருளாளர் சி.மணி வரவு-செலவு அறிக் கையை சமர்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா வாழ்த்தி பேசினார். இதில், டாஸ்மாக் ஊழியர் களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன் நிறைவுரையாற்றினார். இதையடுத்து, மாவட்டத் தலைவராக சி. நாகராசன், மாவட்டச் செயலாளராக வி. ஜெயராமன், பொருளாளராக சி.மணி, மாவட்ட துணைத்தலைவர்களாக என்.இராக்கன், கே.சவுந்தரராஜன், மாவட்ட இணைச்செயலாளர்களாக எம்.ரங்கநாதன், ஏ.மகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.