districts

img

கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பதா?

சேலம், செப்.23- கிராம வங்கியின் பங்குகளை சந்தைப்படுத்தி தனியாருக்கு விற்கக்கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஸ்பான்சஸ் வங்கிகளின் பிடியி லிருந்து கிராம வங்கிகளை விடுவித்து, தேசிய கிராம வங்கியை  உருவாக்க வேண்டும். மித்ரா கமிட்டியின் அடிப்படையில் அனைத்து கிராம வங்கிகளிலும் பதவி உயர்வுகளும், புதிய பணி  நியமங்களும் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்னும் உச்சநீதிமன்ற ஆணைக் கிணங்க, தற்காலிக ஊழியர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். வணிக வங்கி களில் உள்ளதை போல் கருணை  அடிப்படையிலான பணி நியம னங்களை வழங்க வேண்டும். 11  ஆவது இருதரப்பு ஒப்பந்தத்தை முழுமையாக கிராம வங்கிகளில் அமல்படுத்த வேண்டும். கிராம  வங்கியின் பங்குகளை சந்தைப் படுத்தி தனியாருக்கு விற்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம  வங்கி ஊழியர்கள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோசியேசன், தமிழ் நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் ஓய்வு பெற் றோர் அமைப்புகள் சார்பில் சேலம்  மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதியில்  உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆபி ஸர்ஸ் அசோசியேசன் தலைவர் அண்டோ கால்பர்ட் தலைமை வகித்தார்.  இதில் ஆபிஸஸ் அசோ சியேசன் பொதுச் செயலாளர் அறிவுடை நம்பி, ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் பரிதிராஜா, பொதுச்செயலாளர் அஸ்வத், வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் தீனதயாளன் உட்பட திரளான வங்கி ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

;