districts

img

தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தருமபுரி, ஜன.20- தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்  தலைமைச் செயலகத் தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், 35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக் கல் நாட்டினார். இதன்பின்னர், 13 ஆயிரத்து 587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  தரும புரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட  நாள் கோரிக்கையை ஏற்று தரும புரியில் புதிய பால் பதனிடும் நிலை யம் ஒன்று அமைக்கப்படும். புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிக அளவில்  வேலை வாய்ப்புகளை வழங்குவ தற்கு ஏதுவாக தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக் கப்படும். தருமபுரி மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில், 40  கோடி ரூபாய் மதிப்பீட்டில்  அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலகக் கட்டிடம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காணொலிக் காட்சி வாயி லாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார், சட்டமன்ற உறுப்பினர் கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்க டேஷ்வரன், தருமபுரி மாவட்ட ஆட் சியர் ச.திவ்யதர்ஷினி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.