districts

img

சுயம்பு சுகவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு

சேலம், செப்.7- சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந் துள்ளது பழமை வாய்ந்த சுயம்பு சுகவனேஸ்வரர் கோவில்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற்றது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பாலா ஆலயம் செய்யப்பட்டு, ஒரு கோடியே 7  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு விழா திருப் பணிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில், புதனன்று அதிகாலை சுகவனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், அறங்காவலர் குழுத் தலைவர் வள்ளியப்பா, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

;