districts

img

சிபிசிஐடி விசாரிக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 14- அரசுப்பள்ளி ஆசிரியரின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே கொமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). திருமண மாகாத கார்த்திக் டிஆர்பி தேர்வு  எழுதி பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022 அக்டோபரில் ஆசிரி யராக பணியில் சேர்ந்தார். இந் நிலையில், கடந்த திங்களன்று காலை சோளக்காளிபாளையம் அருகே ரயில் பாதையில் உடல்  சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் ஈரோடு மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, மாவட்ட செயலாளர் எம்.அண்ணாதுரை மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொடுமுடி-மொடக்குறிச்சி தாலுகா செயலாளர் கே.பி.கனக வேல், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, ததீஒமு சசி ஆகி யோர் கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்தனர். பின் னர், சடலம் கிடந்த ரயில் பாதையை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து ததீஒமு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிறன்று மாலை கார்த்திக், தான் பணியாற்றும் பள்ளி யில் பயின்ற ஒரு மாணவியிடம் செல் போனில் பேசியதாக கூறப்படுகி றது. இது மாணவியின் தந்தைக்கு  தெரியவரவே பிரச்சனையானது. மாணவியின் தந்தை கார்த்திக்கின் சக ஆசிரியர் ஒருவரை செல்போ னில் தொடர்பு கொண்டு கடுமை யாக திட்டியுள்ளதாகக் கூறப்படு கிறது. தொடர்ந்து இரவு 9 மணியள வில் வீட்டில் இருந்த கார்த்திக்கை கிளம்பி வரச் செய்துள்ளனர்.

இந்நிலையில், மறுநாள் திங்க ளன்று காலை ரயில் பாதையில் சட லம் கிடப்பதாக அதிகாலையில் சென்ற ரயில் ஓட்டுநர்கள் கொடுத்த தகவலையடுத்து, அப்பகுதிக்கு ரயில்வே காவலர்கள் சென்றுள்ள னர். அப்பகுதியில் சுமார் 50 மீட்டர் தொலையில் சாலையின் அருகே வயல்வெளியில் கார்த்திக்கின் இரு சக்கர வாகனம் நின்றுள்ளது. அதன் பதிவெண்ணைக் கொண்டு கார்த் திக்கின் குடும்பத்தினருக்கு பகல் 12  மணியளவில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சோளக்காளி பாளையம் அருகே ரயில் பாதை யில் உடலை பார்த்தனர். பின்னர்  உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற் கூராய்வு முடிந்து உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள், 2 மணிக்கட்டுகளில் வெட்டு காயங் களைப் பார்த்து சந்தேகமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தை நடத்திய காவல் துறையி னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை நம்பி சடலத்தை பெற் றுச் சென்று தகனம் செய்தனர். இதற்கிடையில் மாணவியின் தந்தை அன்றைய தினமே பள் ளிக்கு சென்று மாணவியின் மாற் றுச்சான்றிதழைப் பெற்றுள்ளதும் சந்தேகத்தை எழுப்புகிறது. கார்த் திக் கைபேசி கிடைக்கவில்லை என் பதும் சந்தேகத்தை வலுப்படுத்து கிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தி ருந்தால் கார்த்திக் 30 கிமீ பயணித்து தற்கொலை செய்து கொள்ள வேண் டிய அவசியமில்லை. மேலும், கார்த் திக்கின் இரு சக்கர வாகனத்தில் ரத்த கரை இருந்தது. மேற்கண்ட காரணங்கள் ஆணவப்படுகொலை யாக இருக்கலாம் என்ற சந்தே கத்தை வலுப்படுவதாகப் பெற் றோர்கள் கவலை தெரிவிக்கின்ற னர். ஆகவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறை யும் இந்த வழக்கை சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்றி உரிய விசாரணை களை செய்து குற்றவாளிகளை கண் டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;