தருமபுரி, செப்.20- கால்வாய் ஆக்கிர மிப்பால், குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் உபரி நீர் சூழ்ந்து நிலையில், உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத் துக்கு உட்பட்ட எர்ரண ஹள்ளி ஊராட்சியில் கால் வாய் மூலம் பல்வேறு ஏரி களுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. தற் போது குப்பன் கொட்டாய் பாசன பிரிவு கால்வாய் மூலம் புங்குட்டை ஏரி, மன்னார் குட்டை ஆகிய ஏரிகள் நிரம்பி கடந்த 10 நாட்களாக உபரி நீர் வெளி யேறி வருகிறது. இந்த உபரி நீர் தளவாய்ஹள்ளி, புதூர் கிராம பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் விவ சாய நிலத்தில் சூழ்ந்துள் ளது. இதனால் குடியிருப்பு வாசிகளும், விவசாயிகள் பெரும் சிரமடைந்து வரு கின்றனர். மேலும் நீர்நிலை கால் வாய்களை சிலர் ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் மழை காலம் மற்றும் ஏரி நிரம்பும் போது உபரிநீர் வெளியே செல்வதற்கு வழி யில்லாமல் ஏரி ஆங்்காங்கே உடைந்து விவசாய நிலத் திற்குள்ளும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. நீர்நிலை கால்வாயில், முட்புதர்கள் மண்டி கிடைக் கிறது. இந்த உபரி நீர் பேளா ரஹள்ளி ஊராட்சி, தாமரை ஏரி வரை செல்வதால் இடைப்பட்ட சுமார் 2 கிமீ தூரத்திற்கு தண்ணீர் தேங்கி விவசாய நிலம் சேதப்படு கிறது. எனவே மாவட்ட நிர் வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமரை ஏரிக்கு நீர் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவ சாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.