districts

img

உதகை அருகே திடீர் பள்ளம்: இடம்பெயரும் பொதுமக்கள்

உதகை, செப்.24- உதகை அருகே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், கிராம மக்கள்  பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்  பெயர்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா மட்டத் துப்பாடி என்னும் பகுதியில் தனி யார் தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு  சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், சனியன்று சிலர்  வீட்டின் அருகில் சத்தம் கேட்டுள் ளது. பொதுமக்கள் வெளியே வந்து  பார்க்கும்போது பூமியில் 30 அடி  ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள் ளது. இதனையடுத்து, உடனடியாக தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் தெரிவித்தனர். தோட்ட நிர்வாகிகள், வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்த தின் பெயரில்,  கூடலூர் கோட்டாட் சியர் முகமது குமரத்துல்லா தலை மையில் புவியியல் மற்றும் சுரங்கத்  துறை அதிகாரிகள் அப்பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டனர். இந்த ஆய்வில்,  பல ஆண்டு களுக்கு முன்பாக இப்பகுதியில் கிணறு தோண்டி இருக்கலாம் என்றும், அது மூடப்பட்டு இருக் கலாம் என்றும், தற்பொழுது சாரல்  மழை பெய்து வருகிறது. இதனால் பூமியில் 30 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டிருக்கக்கூடும். இதுகுறித்து, முழு விவரங்கள்  மாவட்ட ஆட்சியரிடம் தகவல்  கொடுக்கப்படும் என அதிகாரிகள்  தெரிவித்தனர். இருப்பினும் இப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் தெரி வித்திருந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் 30 அடி இருந்த பள்ளம், 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கியதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.  இதையடுத்து, சம்பவ இடத் திற்கு சென்று அதிகாரிகள் உடனடி யாக அந்தப் பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங் கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தினர். இதை யடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடைமைகளை எடுத்து மாற்றுக் இடத்திற்குச் சென் றனர்.