districts

img

திருப்பூரைச் சீர்குலைக்கும் பணிக்கு சீர்மிகு நகரத் திட்டமா?

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி என்பது சீர்மிகு நகரம் என்றவுடன் நமக்கு பெரும் எதிர்பார்ப்பு. திருப்பூர் குறித்த  கனவுகளும் வந்து போயின, திட்டம் தொடங்கி  கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது சீர்மிகு நகரம் சீர்குலைந்த நகரமாக காட்சியளிக்கிறது. முறை யான எந்த திட்டமிடலும் இல்லாமல், திருப்பூர் நகரத்தின் மக்கள் தொகை, போக்குவரத்து குறித்த கணக்கெடுப்பு என எதுவும் இல்லா மல் தொடங்கப்பட்ட திட்டமாக உள்ளது.  ஏற்கனவே திருப்பூர் மக்கள் தொகை  பெருக்கத்தினால் அனைத்து சாலைகளும், வாகன நெரிசலில் விழிபிதுங்கி நிற்கிறது. வாக னங்கள் ஊர்ந்து செல்கின்றன. சாலைகளின் அகலம் போதாமல் இருக்கிறது. ஆனால் தற் போது போடப்படும் சாலைகள் ஏற்கனவே இருந்த சாலைகளை விட அகலம் குறைந்த சிறிய சாலைகளாக போடப்படுகின்றன. குறிப் பாக கொங்கு மெயின் ரோடு, 80 அடி கொண்ட தாகும். அது வெறும் 30 அடி ரோடு ஆக போடப் படுகிறது. அங்கேரிபாளையம் சாலை 60 அடி  சாலை, வெறும் 20 அடி சாலையாக மட்டுமே  காங்கீரிட் ரோடு போடப்படுகிறது. இது எதிர்கா லத்தில் மேலும் போக்குவரத்து நெரிசலை அதி கப்படுத்தி, மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற் படுத்தும். தவிர திருப்பூர் மக்களின் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு தராது.  சாக்கடை வடிகால்கள் குறித்து சரியான திட் டமிடல் இல்லை. பல இடங்களில் எந்தவித ஆய்வு மேற்கொள்ளாமல் தொடங்கப்பட்ட திட் டமாகவே சீர்மிகு நகரத் திட்டம் உள்ளது. பல  நூறு கோடி ரூபாய் கொட்டி கொண்டு வரப்ப டும் திட்டம், எந்த பயனும் இல்லாத திட்டமாக போய் விடும் சூழல் உள்ளது. எனவே இது  குறித்து மக்கள் விழிப்புடன் பார்க்க வேண்டி யுள்ளது.

திட்டத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து சம் பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இது  மத்திய அரசு அறிவித்த திட்டம், இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்ற பதிலை மட்டுமே தெரிவிக்கின்றனர். எனவே திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்க என்ற  கோரிக்கையோடு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஓடக்காட்டில் கடந்த டிச.10 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட் டது. வரும் 15 ஆம் தேதி எம்.எஸ். நகர் பகுதியி லும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 

சமூக ஊடகப் பணி

மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு மாநகரப் பகுதி யில் சமூக ஊடகத்தை பயன்படுத்தியும் மக்கள்  பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முயற்சி செய்து வருகிறது. குப்பை தேங்குதல், மின் கம் பங்களை மாற்றுதல், பொது கழிப்பிடம் போன்ற பிரச்சினைகளில் உடனடியாக தலை யீடு செய்து பிரச்சனைகள் தீர்க்கப்படுகின் றன. கடந்த கால கட்டத்தில் நமது பகுதி பொது மக்களுக்கு எந்தெந்த பகுதியில் கொரோனா  தடுப்பூசி எவ்வளவு போடப்படுகிறது என்பதை யும் அதன் கால நேர அளவுகளையும் முன்கூட் டியே மக்களுக்கு செய்தியாக சென்றடைய செய்து, அனைத்துப் பகுதி மக்களும் காத்தி ருக்காமல் தத்தமது பகுதியிலேயே எவ்வித இடையூறும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.  வாராந்திர அடிப்படையில் திருப்பூர் வடக்கு பகுதியில் நல்ல தண்ணீர் எந்தெந்த தேதிகளில் எந்த நேரங்களில் வினியோகிக் கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை பகுதி கிளை செயலாளர்களுடன் பகிர்ந்து கொண்டு, பொதுமக்களுக்கு தெரி யப்படுத்தி, பயனடைய வைத்தோம். பண்டிகை காலங்களில் வெளியூர் செல் லும் மக்களுக்கு வசதியாக அவர்கள் செல் லும் ஊர்களுக்கான பேருந்து நிலையம் குறித்த  தகவல்களை பொது மக்களுக்கு வழங்கி வரு கின்றனர். அதேபோல் திருப்பூர் வடக்கு மாநக ரத்திற்கு உட்பட்ட பகுதியில் “மாதாந்திர மின் தடை” ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன. அரசு வேலை வாய்ப்புக் காக காத்திருக்கும் இளையோர்களுக்கு அது  தொடர்பான அரசின் தகவல்களையும் வழங்கி  கட்சியின் வடக்கு மாநகர சமூக ஊடகக்குழு திறம்பட பணியாற்றி மக்கள் சேவை ஆற்றி வரு கிறது.

எஸ்.வி.காலனி பொதுக் கழிப்பிடம், வ.உ.சி. நகர் சாலை பல இடங்களில் மின் கம் பங்களை மாற்றுவது, மின் விளக்குகளை எரிய  வைப்பது போன்ற பிரச்சினைகளில் தலையீடு  செய்து அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள் ளன.  யூனியன் வங்கி தானியங்கி பணம் வழங்கும் (ஏடிஎம்) மையங்களில் இருக்கின்ற  தானியங்கி இயந்திரத்தில் தகவல் தொடர் புக்கு தமிழ் மொழி இல்லாததை சுட்டிக்காட்டி வடக்கு மாநகர மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றி, யூனியன் வங்கி அலுவலகத்திற்கு தொடர்ந்து முறையிட்டு, தற்போது அந்த இயந்திரத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட் டுள்ளது. இது குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும். தொடர் போராட்டத்திற்கு வெற்றி

தொடர் போராட்டத்திற்கு வெற்றி

நீண்ட காலமாக பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த அங் கேரிபாளையம் சாலை, டீச்சர்ஸ் காலனி, சிங் காரவேலர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்ற  கோரிக்கை வைத்து மற்ற அமைப்புகளையும் இணைத்து மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. இரண்டு ஆண்டுகளில் ஆர்ப்பாட்டம், முற் றுகை கருப்புக்கொடி ஏந்தி மனிதசங்கிலி, கடையடைப்பு என பல கட்டமாக, இடைவிடா மல் தொடர்ந்து போராடியதன் விளைவாக அந்த கடைகள் அகற்றப்பட்டன. மக்கள் பிரச்ச னைகளில் தொடர்ந்து போராடினால் வெற்றி  பெற முடியும் என்பதற்கு இவை சான்றுகளா கும். எனவே தொடர்ந்து பொது வெளியிலும் சமூக ஊடகத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசுவோம். அதை தீர்ப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர குழு தொடர்ந்து போராடும்.

 

;