சேலம், ஜூன் 9- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இமாலய தொடர் ஊழல் முறை கேடுகளையும், மாணவர் விரோத போக் கினை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நடைபெற் றது. பல்கலைக்கழக நியமனங்கள், பொருட் களை வாங்குவது, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் ஊழல்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதனை கண்டித்து இந் திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.பவித்ரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் உட் பட திரளான மாணவர்கள் கலந்து கொண் டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு விதிக்கு மாறாக பல்வேறு துறைகளில் பல வருடங் களாக சிலர் மாற்றப்படாமல் இருப்பதால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்று வருவதாகவும், இதனை சரிசெய்ய உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய அரசு கலைக்கல்லூரிகளில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருக்கக்கூடிய பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்தி மாணவர்க ளுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும். தேர்வு முடிவுகள் மற்ற பல்கலைக்கழகங் களில் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆன பின்னர் தான் பெரியார் பல்கலைக்கழ கத்தில் அறிவிக்கப்படுகிறது இதனால் மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய பல் கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஈடு பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர். இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இப் பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாண வர் சங்க நிர்வாகிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.ஜெகநாதன் பேச்சுவார்த் தைக்கு அழைத்தார். சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரன் மற்றும் நிர்வாகிகள் கபிலன், அருண்குமார், உத்தம் சிங் குளோரி ஆகியோர் துணை வேந்தரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன், 15 தினங் களில் கோரிக்கையின் மீது விசாரித்து நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.முன்னதாக, மாணவர் சங்க போராட்டத்தை யொட்டி காவல் துறையினர் ஏராளமானர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.