ஈரோடு, செப்.23- ஈரோடு மாநகராட்சி, 11 ஆவது வார்டில் சாக்கடை கழிவுநீர் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்துக்கு சக்தி மசாலா நிறு வனம் சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கி உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச் சுவர் கட்டுதல், சாக்கடை வசதி, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் பணிகள் நடைபெறும். பொதுமக்களின் சுய சார்பு தன்மையை ஊக்கு விக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்து வதுமே நமக்கு நாமே திட்டத்தின் பிரதான நோக்கமாகும். ஈரோடு மாநகராட்சி 11 ஆவது வார்டு வெட்டுக்காட்டு வலசு, காமதேனு நகர் மக்களின் வேண்டுகோளை ஏற்று சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் புதிதாக கழிவு நீர் சாக்கடை அமைக்க ரூ.2 லட்சத்துக்கான வங்கி வரைவோலை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனத் தலைவர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சி.ராஜமாணிக்கத்திடம் வரைவோலையை வழங்கினர். சக்தி மசாலா நிறுவனத்தின் இந்தப் பணி யினை அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தார்.