districts

img

திருமூர்த்தி அணையிலிருந்து 5 மதகுகள் வழியாக பாலாற்றில்உபரிநீர் திறப்பு

உடுமலை, டிச.2- திருமூர்த்தி அணையிலிருந்து 5 மதகுகள் வழியாக பாலாற்றில்உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள் ளது திருமூர்த்தி அணை. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு  வரப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார்  4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு  பாசன வசதி பெறுகிறது. மேலும், உடுமலை நகராட்சி மற்றும்  உடுமலை ஒன்றியம்,  குடிமங்கலம் ஒன்றியப் பகுதியிலுள்ள  கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வரு கிறது. இச்சூழலில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்  மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,  மொத்தமுள்ள 60 அடியில்  58 அடி நீர் நிரம்பிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் பாலாற்றில் புதனன்று திறக்கப்பட் டது. பாலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மதகு வழியாக  சுமார் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பாலாற்றின்  வழியோர கிராமங்களுக்கும் , கேரளா மாநிலம் சித்தூர், ஒலவங்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும்  பொதுப் பணித்துறை சார்பில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டது.  

இந்நிலையில் வியாழனன்று அதிகாலையில் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணையின் 5 மதகு கள் வழியாக வினாடிக்கு1450  கன அடி நீர்வெளியேற்றப் பட்டு, பிறகு குறைக்கப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து  வரும் மழையில் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. எனவே, நீர்வரத்து அதிகரிக்கும் போது உபரிநீர் 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது  எனவும்,  தற்போது நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்ப டும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  மேலும் வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில்,  ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால்,  ஆற்றின் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

;