districts

img

சேலம்: திருமணிமுத்தாற்றில் திறக்கப்பட்ட கழிவுநீர்

சேலம், மே 13- சேலத்தில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை நேரடியாக திரு மணிமுத்தாற்றில் திறந்துவிடுவதால் ஆற்றுநீர், நுரை பொங்க பெருக் கெடுத்து ஓடுகிறது. சேலம் மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்க ளாக மாலை நேரங்களில் கனமழை  பெய்து வருகிறது. அதன்படி, திங்க ளன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநகரின் பல்வேறு பகுதிக ளில் கனமழை முதல் மிதமான  மழை பெய்தது. இதனால் பொதுமக் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினா லும், மற்றொருபுறம் திருமணிமுத் தாறு விவசாயிகளை கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. கனமழையை பயன்படுத்திக்கொண்ட சமூக விரோ திகள் திருமணிமுத்தாற்றில் சுத்திக ரிக்கப்படாத சாய கழிவுகளை திறந்துவிட்டுள்ளதால், சாய நுரை கள் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே சாய நுரை கள் மலைபோல் குவிந்து காட்சி யளிக்கிறது. இதனால் அப்பகுதி  விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ள னர். சேலம் மாநகரப் பகுதியில் அனு மதியின்றி இயக்கப்படும் சாயப்பட் டறை எண்ணிக்கை அதிகரித்துள் ளது. இதனால் திருமணிமுத்தாறு, சாயக்கழிவு ஆறாக மாறியுள்ளது. நுரைகள் காற்றில் பறந்து குடியி ருப்பு பகுதியில் விழுவதால் பொது மக்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநக ராட்சி நிர்வாகமும், மாசு கட்டுப் பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை  மேற்கொண்டு, அனுமதியின்றி இயங்கும் சாயஆலைகளை மூட  வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.

;