தருமபுரி, அக். 18- அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர், கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8 ஆவது வார்டு பகுதியில் அரசு அலுவலக உதவியாளர்கள் குடி யிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி யில் இருந்து மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேறி அரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜ வாய்க்காலில் கலக்கி றது. இந்நிலையில், 8 ஆவது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாயில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி உள்ளனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் இருந்து மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேறாமல் குட்டை போல் தேங்கி உள்ளது. நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் மழைநீர் தேங்குவ தால் கொசு உற்பத்தியும், தொற்று நோய் பரவும் சூழலும் உரு வாகி உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் குடியிருப் புகளில் மழை வெள்ளம் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அரூர் பேரூராட்சி நிர்வாகம், கழிவு நீர் கால்வாய் ஆக் கிரமிப்புகளை அகற்றி மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.