ஈரோடு, அக்.28- ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும், பெண் குழந்தைகளுக்குத் திறன் பயிற்சி அளித்திடவும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டல் பாரதி வித்யா பவன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயி லும் பெண் குழந்தைகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் எளிய அறிவியல் செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட் டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, மாவட்ட பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அலு வலர்கள் மற்றும் சுமார் 350 மாணவியர்கள் கலந்து கொண்ட னர்.