districts

img

கல்விச்சாலைகள் திறக்கப்போகிறது! என்ன செய்ய வேண்டும் அரசு?

கோடை விடுமுறை முடிவிற்கு  வந்து  விட்டது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. வெயிலின்  தாக்கம் அதிகமிருப்பதால் 6ஆம் தேதிய லிருந்து 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் ப்படுகிறது. அரசுப் பள்ளியில் பயின்றால் கட் டணமில்லா கல்வி, ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை  அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற  மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்ப ணியில் 20 சதவிகித முன்னுரிமை இட  ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்  பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி  (மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஓமியோபதி மருத்து வம், சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில  7.5 சதவிகித முன்னுரிமை இட ஒதுக்கீடு  வழங்கப்படுகிறது. பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி யில் பயின்ற மாணவியர்களுக்கு உயர்  கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப் படும். 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயி லும் பெண் குழந்தைகளுக்கு இலவச  கராத்தே பயிற்சி, மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு  முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500,  ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்ப டுகிறது. நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000,  ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில்  பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்ப டும். மாணவர்களுக்கு வழங்கப்படும். விலையில்லா புத்தகங்கள் மூன்று பரு வங்களுக்கும், விலையில்லா குறிப்பே டுகள்- 3 பருவங்களுக்கும், விலை யில்லா சீருடைகள்- 4 செட், விலை யில்லா புத்தகப்பை, விலையில்லா காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட நூல், தினந்தோறும் முட்டையு டன் சத்துணவு, இலவச பேருந்து பயண  அட்டை, போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அர சுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு  திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்.  விலையில்லா மிதிவண்டி என நன்மை கள் ஏராளம் ஏராளம். ஆக “அரசுப்பள்ளி யில் சேர்வது வறுமையின் அடையாள மல்ல, பெருமையின் அடையாளம்” ஆக மாற்றப்பட்டுள்ளது.  அரசு பள்ளிகளில் சேர்க்கை உயர்ந் துள்ள நிலையிலும் கணிசமானோர் தனி யார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்ற னர். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்  கீழ் நலிந்த பிரிவினரை தனியார் பள்ளிக ளில் 25 சதவிகிதம் சேர அரசே வழி வகை செய்துள்ளது. இவர்களுக்கான கட்டணங்களை அரசு வழங்கும். எஞ் சிய 75% மாணவ, மாணவிகள் நிர்ண யிக்கப்படும் கட்டணங்களை முழுமை யாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிக ளுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் மாறுப டலாம். ஆனால் அவற்றை அரசே தீர்மானிக்கிறது. ஆனால் அரசு நிர்ண யித்த கட்டணங்கள் எவ்வளவு என அதற் கான கமிட்டி மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு மட்டுமே தெரி யும். மாவட்ட கல்வி அலுவலர்களுக்கே  அந்த விபரம் தெரியாது எனக் கூறப்ப டுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெற் றோர்கள் பெரும்பாலும் கடனாளிக ளாகவே உள்ளனர். அதனை கந்து  வட்டிக்காரர்களிடம் கடன் படுகின்ற னர். ஆதார் கார்டு போதும் என்று ஆசை  வார்த்தை கூறும் செல்போன் செயலிக ளின் வலையிலும் சிக்கி சீரழிக்கப்படு கின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு சுய நிதி  பள்ளியும் அரசு தீர்மானித்துள்ள கட்டண விகிதங்களை அறிவிப்பு பல கையில் வெளியிட வேண்டும். ஆனால்,  எந்த பள்ளியிலும் இவ்வாறு அறிவிப்பு பலகையில் ஒட்டப்படுவது இல்லை. பெற்றோர் கேட்டாலும் தெரிவிப்பது இல்லை. கல்வி வியாபாரிகள் ஆண் டிற்கு இவ்வளவு லாபம் வேண்டும் என,  தாங்கள் தீர்மானித்த கட்டணங்களை வசூலிக்கின்றனர். அரசு கட்டணத்தில் 25  விழுக்காடு மாணவ, மாணவிகளிடமும் கட்டணங்கள் பெறப்படுகிறது. ஆனால் எந்த கட்டணமும் பெறவில்லை, நாங்களும் செலுத்தவில்லை என  ஆய்வுக்குழுவினரிடம் தெரிவிக்கு மாறு நிர்பந்திக்கப்படுவதும் உண்டு. இதனைக் குறிப்பிடும்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட் டியிட்ட ஒரு வேட்பாளர், கல்வி நிறுவ னங்கள் நடத்தி வருபவர் தனது சொத்து  மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் எனக் கூறி யது நினைவிற்கு வருகிறது.  ஒருபுறம் புதிய கல்விக் கொள்கை  என்ற பெயரில் ஆரம்பக் கல்வியிலி ருந்தே பொதுத் தேர்வுகளை புகுத்தி, குலக்கல்விக்கு வழிவகுக்கும் ஒன்றிய  அரசின் கத்தி தொங்கிக் கொண்டிருக்கி றது. மறுபுறம் நுனி நாக்கில் ஆங்கிலம்  என்ற பெயரில் சாதாரண, நடுத்தர பெற் றோரின் 10 ஆண்டு கால வருமானத்தை,  சேமிப்பை சுரண்டிக் கொழுக்கும் தனி யார் கல்வி நிறுவனங்கள். கல்வி வியா பாரிகளின் நுகத்தடியிலிருந்து பெற் றோர் விடுவிக்கப்பட வேண்டும். ஒவ் வொரு கல்வி நிறுவனத்திற்கும் அரசு  நிர்ணயிக்கும் கட்டணங்கள் எவ்வளவு  என அனைவருக்கும் தெரிய வேண்டும்.  பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட  வேண்டும். அதற்கு மேல் வசூலிக்கும் கல்வி நிறுவணங்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதன்மூலம் கல்வியை சந் தைப்படுத்துவோரின் எண்ணத்தை முடக்க முடியும். சக்திவேல், ஈரோடு

;