districts

வெயிலில் உணவருந்தும் பள்ளி மாணவர்கள்!

தருமபுரி, பிப்.26- தருமபுரி அருகே அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சுட்டெரிக்கும்  வெயிலில் அமர்ந்து உணவருந்தும்  நிலை உள்ளதாக பெற்றோர்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட மூக் கனூர் கிராமத்தில், தருமபுரி - அரூர்  நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 182 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி வழங்கப்படும் மதிய உணவை பெற் றுச்செல்லும் மாணவ, மாணவிகள், பள்ளியின் எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் வெளுத்து வாங்கும் வெயிலில் அமர்ந்து உணவருந்தும் அவல நிலை உள்ளது. தற்போது கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம்  100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைக்கும் நிலையில், மாணவ, மாணவிகளை பாதுகாப்பின்றி வெளியில் அமர வைத்து உணவு அருந்தும் நிலை உள் ளது. இதற்கு பாதுகாவலராக ஒரு  ஆசிரியையையும் ஏற்பாடு செய்துள் ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளிக்கு பாதுகாப்பாக சுற்றுச்சு வர் இதுவரை அரசு கட்டித்தரவில்லை. பள்ளியை சுற்றியுள்ள காடுகளில் இருந்து அவ்வப்போது விஷ உயிரி னங்களும் பள்ளிக்குள் வந்து விடுகின் றன. பாதுகாப்பில்லாமல் வெளுத்து வாங்கும் வெயிலில் மாணவ, மாணவி கள் உணவருந்துவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் புகார ளிக்கவுள்ளதாக, பெற்றோர்கள் தெரி வித்துள்ளனர்.