districts

img

முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டில் சமூக விரோதிகள் கூடாரமாக பள்ளி கட்டிடம்

திருப்பூர், நவ. 23 - முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்  பகுதியில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு பல  ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு  கொண்டு வராததால், சமூகவிரோத  செயல்கள் நடைபெறும் இடமாக மாறி யுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக் கும் முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிபாளை யம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில்  குடிசை மாற்று வாரியத்தால் 20 ஆண்டு களுக்கு முன் குடியிருப்புகள் கட்டப்பட் டது. தற்போது இந்த பஞ்சாயத்தில் 30  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர். இங்குள்ள ஹவுசிங்  யூனிட்டில் இன்னும் 7க்கும் மேற்பட்ட  கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு  வராமல் உள்ளது. அப்பகுதியில் உள்ள  பயன்படுத்தப்படாத பள்ளிக்கூடக் கட்டி டத்தில் சமூக விரோத செயல்கள் நடை பெற்று வருகிறது. இரவு நேரங்களில்  கஞ்சா போன்ற போதைப் பொருட்கள்  பயன்படுத்துவதற்கும், போதை ஊசி  மற்றும் திருட்டு பொருட்களை பதுக்கி  வைக்கும் இடமாகவும் சிலர் பயன்ப டுத்தி வருகின்றனர். இப்பகுதியிலிருந்து காவல் நிலை யம் 12 கி.மீ தொலைவில் உள்ளது. எனவே அப்பகுதியில் காவல் துறையி னர் தணிக்கைச்சாவடி அமைத்து கண் காணிக்க வேண்டும் என அப்பகுதி மக் கள் நீண்ட நாட்களாக கோரிக்கை  வைத்து வருகின்றனர். மூன்று மாதங்க ளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அப்பகுதியில் உள்ள மக்கள்  பயன்படுத்தாத கட்டிடங்களைப் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற் கொண்டனர். ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இப்பகுதியில் உள்ள குழந்தைகளின் எதிர் காலத்தை  கருத்தில் கொண்டு, இங்கு நடைபெற்று  வரும் சமூக விரோத செயல்களைத்  தடுத்த நிறுத்த அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரியமாக மாற்றப்பட் டுள்ள குடிசை மாற்று வாரியம் அந்த கட் டிடங்களைப் பஞ்சாயத்திற்கு ஒப்ப டைக்க வேண்டும். இனி அந்த கட்டிடங்க ளைப் பயன்படுத்த முடியாது என்பதால்  பஞ்சாயத்து நிர்வாகம் அந்த கட்டி டத்தை இடித்துவிட்டு மக்கள் பயன்ப டுத்தும் வகையில் புதிய கட்டிடங்கள்  கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.