districts

img

சங் பரிவார் பேராசிரியரின் பாலியல் அத்துமீறல்கள் பாலியல் உறவுக்கு உட்பட்டால் மட்டுமே பட்டம் என மிரட்டல்

கோயம்புத்தூர், மார்ச் 25- ஆர்எஸ்எஸ் அமைப்பின் உட்பிரிவு அமைப்பாக சிக்சா சன்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் என்கிற அமைப்பு உள்ளது. இதன்  சுற்றுச்சூழல் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பா ளராக இருப்பவர் எஸ்.ஆர்.மதன் சங்கர். பாஜக விற்கு தீவிரமாக பணியாற்றி வருபவர். கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின்   உயிரியல் தொழில் நுட்பத் துறையின் தலைவ ராகவும், கல்லூரியின் முதல்வராகவும் இருந்து வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்களிடம் தொடர்ந்து இந்துத்துவா கருத்துக்களை பரப்பி வந்துள்ளார்.  மேலும், சங்பரிவார அமைப்புகளை அழைத்து கல்லூரி யில் தொடர்ந்து நவராத்திரி, மகாசிவராத்திரி, மகாபூர்ணிமா, வரலட்சுமி விரதம், கருடபஞ் சமி, விஷ்வஅத்தமி போன்ற விழாக்களை முன்  னெடுத்து வருகிறவர். தங்களது அழைப்பித ழில் கூட திருவள்ளுவருக்கு காவி உடை  போடாவிட்டால் கோபம் வருமாம். அந்தள விற்கு தீவிர இந்துத்துவ சிந்தனையில் ஊறிய வர் என சொல்லப்படுகிறது.  இவர் தன்னிடம் பயிலும் ஆண் ஆராய்ச்சி  மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்திருப்பது தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. 

உயிரி தொழில்நுட்ப பிரிவில் கடந்த ஒன்  றரை வருடமாக ஆய்வு செய்து வரும் மாண வர் ஒருவரை, பாலியல் ரீதியாக துன்புறுத்தி யுள்ளார். இதுகுறித்து அந்த மாணவர் கூறு கையில், எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்  தார். தன்னுடன் பாலியல் உறவு  வைத்துக் கொள்ளாவிட்டால் பட்டத்தை முடிக்க விடா மல் செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும் என்னை மதரீதியாக இழிவுபடுத்தி பேசினார். பல மாணவர்களை  சாதி ரீதியாகவும் இழிவு படுத்தி பேசுவார். இது பற்றி நான் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், நிர்வாகம் மதன் சங்கருக்கு ஆத ரவாகவே இருந்தது. அதன்பின்னர் நான்  பாரதி யார் பல்கலைக்கழகத்திடம்  புகாரளித்தேன். இந்நிலையில் ஐ.சி.சி கமிட்டி( உள் புகார் குழு)  அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து  மதன் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  ஆனால், என்னை பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியது குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் ஆய்வு படிப்பை தொட ருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் என்னால் படிப்பை தொடர முடிய வில்லை. பல மாணவர்கள், தங்களின் கல்வி பாதிக்கப்படும் என்கிற பயத்தில்  பலரும் வெளி யில் சொல்லாமல் அப்படியே சென்று விடுவ தும்,

பலர்  மதன் சங்கரின் பாலியல் தொந்தரவு  தாங்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி யும் சென்றிருக்கின்றனர் என்பது தெரியவந் துள்ளது. தற்போது, இந்த புகாரை நான் பொது வெளியில் கொண்டு வந்த நிலையில், பல்வேறு மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு, மதன் சங்கரின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புகாரை கல்லூரி நிர்வாகத்திடம் கொண்டு சென்றதாகவும், ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மிரட்டி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.  மாவட்ட நிர்வாகம், உயர்கல்வித்துறை உட னடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும், அங்கு என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல இருப்பதாக சம்பந்தப்பட்ட மாணவர் நம்மி டம் தெரிவித்தார்.