districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.25- வளர்ச்சித்துறையில் திணிக்கப் படும் பணி நெருக்கடிகளை கைவிடக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் தரும புரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை திட்டங் களை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண் டும். ஊழியர்களுக்கு அதிக வேலை திணிப்பு செய்வதை கைவிட வேண் டும். நிர்வாக கட்டுமான பொருட்க ளுக்கான தொகையினை உடனுக்கு டன் விடுவிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கத்தினர் தரும புரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செய லாளர் சங்கர், பொருளாளர் சர்வோத்த மன், உதவி பொறியாளர் அன்பழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.