உதகை, மே 26- கூடலூர் அருகே டாஸ்மாக் கடை யில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் இரவு நேரத் தில் கூடலூர் சிறப்பு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது குந்தலாடி டாஸ்மாக் கடையை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதனை கண்ட காவலர்கள் இருவரை பிடிக்க முயன்றனர். அப்போது, காவலர் களை தாக்க முயற்சி செய்ததாக கூறப் படுகிறது. இதனையடுத்து, இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித் துள்ளனர். இதில் மணி என்ற சாம்பார் மணி (47), சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். மேலும், காயமடைந்த காவலர் கள் சியாபுதீன், அன்பழகன் ஆகிய இருவரும் கூடலூர் அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசா ரணை மேற்கொண்டார்.