சேலம், டிச.19- நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த்துறையை கண்டித்து சேலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், தாதகாப் பட்டி கிராமத்தில் 16.50 ஏக்கர் நிலம் பட்டியலின மக்களுக்கு உரிமையா னது. இந்த நிலத்தை போலி பத்திரங் கள் மூலம் சட்டவிரோதமாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலத்தை மீட்டு, பட்டியலின மக்களி டம் ஒப்படைக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும், உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடரப்பட் டது. இந்த வழக்கின் தீர்ப்பில், ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு, பட்டியலின மக்களின் ஒப்ப டைக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பை வருவாய்த்துறை அதிகாரிகள் மதிக் காமல் அலட்சியப்படுத்தி வருகின்ற னர். இதனை கண்டித்து சேலம் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கட்சியின் கிழக்கு மாநகரக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பொன்.ரமணி, பி.ராம மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.