districts

img

கால்வாய் மண் கரையை தார்ச் சாலையாக மாற்றித்தர கோரிக்கை

உடுமலை, பிப்.16- உடுமலை பிரதான பிஏபி கால்வாய் கரை யின் பகுதியில் தார்ச் சாலை அமைத்து தர  வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து விவ சாய பயன்பாட்டிற்கு கால்வாய் வெட்டப் பட்டு உள்ளது. இந்த கால்வாய் கரைகளின்  இரு புறங்களிலும் பொதுப்பணித்துறை யினர் பயன்படுத்தும் வகையில் சிறிய வாக னங்கள் செல்லும் வகையில் மண் சமப்படுத் தப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் கரையில்  சில ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை அரசு  கலைக்கல்லூரி முதல் பெரிய கோட்டை பகு தியில் இருக்கும் பழனி தேசிய நெடுஞ்சாலை  வரை ஒரு பகுதி தார் சாலையாக அமைக்கப் பட்டது. அதை பொது மக்களும், விவசாயிக ளும் பயன்படுத்தி வருகிறார்கள். அதே போல்  உடுமலை பிரதான பிஏபி கால்வாய் கரை  பள்ளப்பாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து உடுமலை அரசு கலைக்கல்லூரி வரை கால்வாய் கரையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.