districts

img

வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்திடுக

கோவை, நவ.23- இளைஞர்களின் அரசு வேலை  வாய்ப்பை பறிக்கும் அரசா னையை தமிழக அரசு ரத்து செய்திட  வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க  கோவை மாவட்ட மாநாடு  வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட மாநாடு, சனியன்று தாமஸ்  கிளப்பில் மாவட்டத் தலைவர் ஜெக நாதன், சங்கத்தின் கொடியை ஏற்றி  தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.வேலு மணி வரவேற்றார். சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி மாநாட்டை துவக்கிவைத் தார். வேலை அறிக்கையை அறிக்கையை மாவட்டச் செயலா ளர் ப.செந்தில்குமார் மற்றும் வரவு  செலவு அறிக்கையை பொருளா ளர் ப.நடராஜன் ஆகியோர் முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி, தென்மண் டல இன்சுரன்ஸ் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் வி.சுரேஷ், தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய் வூதியர் சங்க மாவட்டச் செயலாளர்  கே.அருணகிரி ஆகியோர் உரை யாற்றினர். பிற்பகலில் நடைபெற்ற   மகளிர் மாநாட்டிற்கு, துணைக் குழு  அமைப்பாளர் எ.பிரகலாதா தலைமை வகித்தார். மகளிர் துணைக் குழு உறுப்பினர் ஆர்.கல் பனா காந்தி வரவேற்றார். தமிழ்நாடு  நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரா. மாலதி ராணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. லதா, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் வி. சாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். பணியிடங்களில் பெண்களுக் கான பாதுகாப்பு உள்ளிட்ட விஷ யங்கள் மாநாட்டில் விவாதிக் கப்பட்டது. மகளிர் மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர்  பி.ஜோதிமணி சிறப்புரையாற்றி னார். மகளிர் துணைக் குழு உறுப்பி னர் ஏ.வளர்மதி நன்றி கூறினார். முன்னதாக அரசு ஊழியர் சங்க மாநாட்டில், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன் வாடி. வருவாய் கிராம ஊழியர்கள்,  செவிலியர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஊழியர்கள், ஊர்ப்புற  நூலகர்கள் உள்ளிட்ட ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட ஊதி யம் வழங்க வேண்டும். இளைஞர்க ளின் அரசு வேலை வாய்ப்பை பறிக்கின்ற அரசாணை எண்.  115, 152, 139, 10, 297 போன்ற அர சாணைகளை ரத்து செய்திட வேண் டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். காலை சிற்றுண் டித் திட்டத்தை சத்துணவு ஊழியர் களே நடத்திட ஆவண செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டது.  இதில், மாவட்டத் தலைவராக ச.ஜெகநாதன், மாவட்டச் செயலா ளராக ப.செந்தில்குமார், பொரு ளாளர் ப.நடராஜன் உள்ளிட்ட 11  பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு  செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாநில துணைப்  பொதுச் செயலாளர் மு.சீனிவாசன்  மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினார். முடிவில், மாவட்டப் பொருளாளர் பி.நடராஜன் நன்றி கூறினார்.  முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து நூற் றுக்கணக்கான அரசு ஊழியர்கள் பேரணியாக மாநாட்டு அரங்கை அடைந்தனர்.  ஈரோடு இதேபோன்று, அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 15 ஆம்  மாநாடு அரசு ஊழியர் சங்க அலுவ லகத்தில் சனியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, சு.செந்தில்நா தன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன் தொடக்கவுரையாற்றினார். மாவட் டச் செயலாளர் ச.விஜயமனோ கரன் வேலை அறிக்கையும், மாவட் டப் பொருளாளர் ஆர்.சுமதி வரவு  செலவு அறிக்கையும் சமர்ப்பித்த னர். மகளிர் துணைக்குழு அமைப் பாளர் ஜி.சசிகலா மகளிர் துணைக் குழு அறிக்கை சமர்பித்தார். இம்மாநாட்டில், மாவட்டத்  தலைவராக எஸ்.ரமேஷ், செயலா ளராக ச.விஜயமனோகரன், பொரு ளாளராக ஆர்.சுமதி, மகளிர் துணைக்குழு அமைப்பாளராக டி. கோமதி, மாநில செயற்குழு உறுப் பினராக எம்.கண்ணன் மற்றும்  தணிக்கையாளராக க.சக்திவேல் முருகன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.