districts

img

வாணியாறு அணையில் உபரிநீர் திறப்பு

தருமபுரி, செப்.12- பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு பகுதிகளில் பெய்து வரும்  பலத்த மழை காரணமாக வாணியாறு அணை நிரம்பியதை யடுத்து அதன் உபரிநீர் திறக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக் காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணை யின் நீர்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். அணைக்கு ஏற் காடு மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்நிலை யில் ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால் வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வாணியாறு அணையின் நீர்மட்டம் 63.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணை யின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 80 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வாணியாறு வழியாக செல்லும் தண்ணீரானது பழைய ஆயக் கட்டுகளின் பாசன வாய்க்கால்கள் மூலம் திருப்பி விடப்பட் டுள்ளது. இந்த வாய்க்கால்கள் வழியாக செல்லும் தண்ணீ ரால் வெங்கடசமுத்திரம், மோளையானூர், தென்கரைக் கோட்டை, பறையப்பட்டி புதூர் பகுதியிலுள்ள 10க்கும் மேற் பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

;