districts

img

மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது

அவிநாசி, மே 21 அவிநாசி சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்க ளாக பெய்த தொடர் மழை யால் சாலைகளில் மழைநீர்  குடியிருப்புகளுக்குள் புகுந் தது. அவிநாசி  பகுதிகளில்  இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந் நிலையில் திங்களன்று சேவூர், தண்டுக் க்காரன்பாளையம், பாப்பாங்குளம், முறி யாண்டாம்பாளையம், போத்தம்பாளையம், சாவக்கட்டுபாளையம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியது.  தொடர்ந்து பெய்த கனமழை மாலை 6 மணி வரை நீடித்தது. கோபி பிரதான சாலை, சிந்தாமணி பாளையம், வலையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் கோபி சாலை யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மேலும் பாப்பாங்குளம் ஊராட்சி காசி லிங்கம்பாளையம், சிந்தாமணிபாளையம் உள்ளிட்ட பகுதியில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. இதையடுத்து ஊராட்சி மன்றத்  தலைவர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஜேசிபி வாகனம் மூலம் அப்ப குதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறி யதாவது இப்பகுதியில் உயரமட்ட பாலம்,  தடுப்பு அமைக்க உடனடியாக நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லா விட்டால், வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்பிற்குள்ளாகும் என்றனர்.   தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி வட்டாட்சியர் மோகனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், விஜயகுமார் (ஊராட்சிகள்) விஜயகுமார் அப்பகுதியை பார்வையிட்டனர். மேலும், இப்பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தால், பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்க வைப் பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றனர்.  முன்னதாக ஞாயிறன்று, இடியுடன் பெய்த கனமழையால், புலிப்பார் ஊராட்சி  பொன்னேகவுண்டன்புதூரில் முருகேஷன் என்பவருக்கு சொந்தமான 3 மாடுகள் உயிரி ழந்தன. மாடுகளை இழந்த முருகேசனுக்கு தலா ரூ. 37,500 வீதம், ரூ. 1லட்சத்து 1,2500  வழங்கப்பட்டது.

;