districts

img

ரயில் ஓட்டுநர்கள் 36 மணி நேர உண்ணாவிரதம்

ஈரோடு, பிப்.21- ரயில்வே அமைச்சகத் தின் மாற்றாந்தாய் மனப் போக்கை கண்டித்து 36 மணி  நேர உண்ணாவிரத போராட் டத்தில், ரயில்வே ஓட்டுநர் கள் ஈடுபட்டனர்.  வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொடர் இரவுப் பணியை 2 ஆகக் குறைக்க வேண்டும். 36 மணி நேர வார ஓய்வுடன் வழக்கமான 16  மணி நேர ஓய்வை எடுக்க அனுமதிக்க வேண் டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். பெண் ரயில் ஓட்டுநர்களின் குறையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். பிற அலவன்ஸ் உயர்வைப் போல ரன்னிங் அலவன்சையும் உயர்த்த வேண்டும். பாது காப்பு உபகரணங்களை என்ஜினில் பொருத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோடு சந்திப்பில் அனைத் திந்திய லோகோ ஓட்டுநர் கழகத்தின் சார்பில்  வியாழனன்று காலை உண்ணாவிரதம் தொடங் கியது. சேலம் கோட்டப் பொருளாளர் சீனிவாச பட் தலைமை வகித்தார். தென்மண்டல துணைத்தலைவர் ஜி.சுப்பிரமணியன் முன் னிலை வகித்தார். டிஆர்இயு நிர்வாகி கே.பிஜு வாழ்த்தி பேசினார். முன்னாள் சேலம் கோட் டச் செயலாளர் டி.புஷ்பராஜ் சிறப்புரையாற் றினார். தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெற்ற உண்ணாவிரதம் வெள்ளியன்று மாலை முடி வுற்றது.