districts

img

குறைந்தபட்ச பென்சன் கேட்டு ரயில் மறியல்

கோவை, டிச.20- குறைந்தபட்ச பென்சன் ரூ 9  ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஒன் றிய அரசை கண்டித்து ”இபிஎஸ் 95”  பென்ஷனர் சங்கத்தினர் கோவை யில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இபிஎஸ் 95 பென்ஷனர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும்  கோவை இபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கோவை  ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற  போராட்டத்திற்கு, இபிஎப் பென்ஷ னர்கள் நலச்சங்கத்தின் அகில இந்தியக்குழு உறுப்பினர் ஏ.ஆர். துரைசாமி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநில துணைத்தலை வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இபிஎப் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.செல்வராஜ், மாவட்டத் தலைவர் ஆர்.நாகராஜ், செயலா ளர் கே.குமாரசாமி, பொருளாளர் எஸ்.ஆர்.மணி மற்றும் எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் மோகன் ராஜ்,  எல்பிஎப் கே.ஆர்.பழனிச்சாமி,  எம்எல்எப் மு.தியாகராஜன், ஏஐடி யுசி மாவட்ட பொதுச்செயலாளர் சி. தங்கவேல் உள்ளிட்ட கோவை, நீல கிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களிலிருந்து திரளான  ஓய்வூதியர்கள் கலந்துகொண்ட னர். முன்னதாக போராட்டத்தில், குறைந்தபட்ச பென்சனாக ரூ.9  ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கிட  வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் மருத்துவக்காப்பீடு வழங்க  வேண்டும். தகுதியுள்ள அனைவ ருக்கும் முழு சம்பளத்திற்கான பென்சனை, உச்சநீதிமன்றம் தீர்ப் பின் அடிப்படையில் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.