districts

img

பாராட்டுரை போதுமா; சம்பளம் தர வேண்டாமா?

திருப்பூர், செப். 5 - மக்களைத் தேடி மருத்துவத் திட் டத்தில் வேலை செய்யும் ஊழியர் களை பாராட்டிப் பேசினால் போதுமா, வாழ்வதற்கான சம்பளம் தர வேண்டாமா என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட  தலைவர் கவிதா தலைமையில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியரகம் முன் பாக கோரிக்கை முழக்கம் எழுப்பி மனுக் கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் எம்.சாந்தாமணி, பொரு ளாளர் எஸ்.மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்ற னர்.  இத்திட்டத்தில் வேலை செய்யும்  தன்னார்வலர்களை முழு நேர ஊழி யர்களாக்க வேண்டும், மாதம் ஒன் றுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் நிர்ண யித்து வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம் வழங்க வேண் டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழகம் முழுவதும் மாவட் டத் தலைநகரங்களில் மனுக் கொடுக் கும் இயக்கம் நடத்தினர். இதன் ஒரு  பகுதியாக திருப்பூரில் நடைபெற்ற மனுக் கொடுக்கும் இயக்கத்தில் பங் கேற்றோர் கோரிக்கை முழுக்கம் எழுப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் 240 பேர்  பகுதி நேர பெண் சுகாதார தன்னார்வ லராக பணியில் சேர்ந்து கடந்த  ஓராண்டாக, அனைத்து கிராமத்துக் கும் தனியாக சென்று கிராம மக்க ளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்  மற்றும் தொற்றா நோய்களை கண்ட றிந்து அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்று மருந்து, மாத்திரை களை தங்கு தடையின்றி இதுவரை கொடுத்து வருகிறோம். எங்களுக்கு ரூ. 4500 மட்டுமே  மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

காலத்திற்கேற்ப ஊக்கத் தொகையை உயர்த்தி  வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊக்கத்தொகையை சுகாதாரத்து றையின் கீழ் அவரவர் வங்கி கணக் கில் நேரடியாக வழங்க வேண்டும்.  போக்குவரத்துப்படி, உணவுப்படி வழங்க வேண்டும். மருத்துவ உபக ரண பராமரிப்பு படி வழங்க வேண் டும். அனைத்து ஊழியர்களுக்கும் காலதாமதமின்றி ஊதியம் வழங்க  வேண்டும். ஊழியர்களின் பேறு  கால சலுகைகள் வழங்க வேண்டு.  மலைப்பகுதியில் பணியாற்றுபவர் களுக்கு சிறப்பு படி வழங்க வேண் டும். அரசு விடுமுறை நாட்களை விடுப்பு நாளாக கருத வேண்டும். ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை, அடையாள அட்டை வழங்க  வேண்டும். பெண் சுகாதார தன்னார் வலர்கள் என்பதை மாற்றி, ஊழியர் களாக நியமிக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். சிஐடியு மாவட்ட துணை தலைவர்  கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச்  செயலாளர் கே.ரங்கராஜ், அங்கன் வாடி ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சித்ரா ஆகியோர் கோரிக் கையை ஆதரித்து வாழ்த்திப் பேசி னர். இதன் முடிவில் மாவட்ட ஆட்சி யரகத்தில் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.

;