districts

img

ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

சேலம், செப்.14- ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடியிருக் கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், தளவாய்பட்டி அருகே செயல்பட்டு வரும் சேலம் ஆவின் நிறுவனத்திற்கு கடந்த 1979 ஆம் ஆண்டு 38 பேர் சுமார் 50  ஏக்கர் நிலத்தை வழங்கினர். அப் போது ஆவின் நிர்வாகம் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை மற்றும் மாற்று இடம் வழங்க முடிவு  செய்யப்பட்டது. 43 ஆண்டுகள் கடந் தும் இதுவரை ஆவின் நிர்வாகம் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை, குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கவில்லை. இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயி கள் சிவராமன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.  இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா நேரில் சென்று போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்தார். மேலும், கோரிக்கை வெல்லும் வரை மார்க்சிஸ்ட் கட்சி உடன் நிற்கும் என ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். இதில், சிபிஎம் சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, தாலுகாக்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்தி ரன், கிளை செயலாளர் ஜெயக்கு மார், மூத்த தலைவர் ரத்தினம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;