districts

img

மாணவர் நெஞ்சங்களில் சாதிய நஞ்சு: வன்கொடுமைக்கு எதிராக கண்டன முழக்கம்

திருப்பூர், ஆக.17- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி யில் பள்ளி மாணவன் மீது சாதிய வன் கொடுமை தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட் டப்படியான தண்டனையை உறுதி செய்திட  வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி யில் பள்ளி மாணவன் மீது சக மாணவர் களே, சாதிய வன்கொடுமைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி யான தண்டனையை உறுதி செய்திட வலியு றுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங் களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீண் டாமை ஒழிப்பு முன்னணி அறைகூவல் விடுத் தது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அலுவ லகம் முன்பு புதனன்று தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தலைமையில் மார்க்சிய, பெரியா ரிய, அம்பேத்கரிய ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளை ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்  தலைவர் ச.நந்தகோபால் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், ஆதித்தமிழர் பேரவை விடுதலைச் செல்வன், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை  அ.சு.பவுத்தன், தந்தை பெரியார் திராவிடர்  கழகம் சண்.முத்துக்குமார், திராவிடர் விடு தலைக் கழகம் முகில்ராசு, திராவிடர் கழகம் யாழ்.ஆறுச்சாமி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க சி.பானுமதி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.  இதில், சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திராவிடத் தமிழர் கட்சி உள்ளிட்ட எரா ளமானேர் கலந்து கொண்டனர். முடிவில் ததீ ஒமு மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ்  நன்றி கூறினார்.