districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.8 லட்சம் அபராதம் வசூல்

ரூ.8 லட்சம் அபராதம் வசூல் தருமபுரி, மார்ச் 6- தருமபுரி மாவட்டம், அரூர் மோட்டார் வாகன ஆய் வாளர் குலோத்துங்கன் தலைமையிலான அலுவலர் கள், கடந்த ஒரு மாதமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். மொத்தம் 368 வாகனங்கள் தணிக்கை  செய்யப்பட்டன. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்தது, அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிவந்தது, அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்திய வாகனங்கள் உள் ளிட்ட 174 வாகனங்களுக்கு வரியாக ரூ.1,68,275, அபராத மாக ரூ.6,38,700 என மொத்தம் ரூ.8,06,975 அபராதம் விதிக்கப்பட்டது. முறையான ஆவணம் இல்லாத 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதை மாத்திரை விற்ற 15 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 15 பேர் கைது நாமக்கல், மார்ச் 6- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே  உள்ள மயான முட்புதற்களில் போதை மாத்திரைகளும்  ஒரு முறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக வெப் படை தனிப்பிரிவு காவலருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண் டனர். இதில், சில இளைஞர்கள் இரவு நேரங்களில் திரண்டு, தங்களுக்கு போதை வருவதற்காக மாத்தி ரையை நீரில் கரைத்து ஊசியாக தங்கள் நரம்புகளில் செலுத்திக் கொள்வது தெரிய வந்தது. இதுகுறித்து வெப்படை போலீசார் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளருக்கு தெரிவித்ததை அடுத்து 10 தனிப்படை களை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளி பாளையம் மற்றும் வெப்படை பகுதியில் உள்ள சில  இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் கட்டிட வேலைக்கு செல்வோர், ஆன்லைன் மூலம் ஆர் டர் செய்து அதிலிருந்து கொரியர் மூலமாக பெறப்ப டும் வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து, தங்கள் கைகளில் ஊசிகள் மூலம் செலுத்தி போதையில் இருப் பது தெரிய வந்தது.  இம்மாத்திரைகளை கௌதம் (32) என்பவர் விற் பனை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இதனைய டுத்து, தீவிர விசாரணையில், போதை மாத்திரை விற்ப னையில் ஈடுபட்டதாக கூறி பள்ளிபாளையம் வெப்படை  பகுதியைச் சேர்ந்த கிரி ஹரண் (26), சுஜித் (26), கௌரி  சங்கர் (21), தீபன் (21), நந்தகுமார்(19) மற்றும் 17 வயது  சிறுவன், 18 வயது சிறுவர்கள் இருவர் என 15 இளை ஞர்களை போலீசார் கைது செய்து, சுமார் 10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட 15 பேரும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

ரூ.1,105.38 கோடியில்  விவசாயிகளுக்கு கடனுதவி

ரூ.1,105.38 கோடியில்  விவசாயிகளுக்கு கடனுதவி சேலம், மார்ச் 6- சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் நடப் பாண்டில் 1,41,833 விவசாயிகளுக்கு ரூ.1,105.38 கோடி  கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், கால்நடைப் பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க 2023-24 ஆம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டுக்குறியீடு ரூ.1,007 கோடியில் தற்போது 1,08,454 விவசாயிகளுக்கு ரூ.956.65 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகைகள் அனைத் தும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அதிக எண்ணிக்கை யிலான விவசாயிகள் பயிர்க்கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் பயனடைந்து உள்ளனர். மேலும், கால்நடைகள் வளர்க்க கேசிசி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2021 ஆம்  ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கு ரூ.246.93 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 33,379 விவசாயி களுக்கு ரூ.148.73 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் நடப்பாண்டில் 1,08,454 விவ சாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.956.65 கோடியும், கால் நடைப் பராமரிப்புக் கடனாக 33,379 விவசாயிகளுக்கு ரூ.148.73 கோடி கடன் என மொத்தம் இந்த இரண்டு வகை யான திட்டங்களின் மூலம் 1,41,833 விவசாயிகளுக்கு ரூ.1,105.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதென தெரி விக்கப்பட்டுள்ளது.

 காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல கோரிக்கை

தருமபுரி, மார்ச் 6- பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வன அலுவலரிடம் விவசாயிகள் மனு அளித் தனர். தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதி யொட்டியுள்ள விவசாயிகள், வனவிலங்குக ளால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றிற்கான இழப்பீடுகளை பெறுவதற்காக விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வன அலு வலர் அப்பால நாயுடு தலைமையில் வனத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பாலக்கோடு வட்டம், அண்ணா மலைஹள்ளி பகுதியில் உள்ள பேட்டராய சுவாமி கோவில் மிகவும் பழமைவாய்ந்த, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபடும் கோவிலாக இருந்தது. அதனை புனரமைக் கும் பணிகள் நடந்த நிலையில், அதற்கு வனத் துறை தடை விதித்தது. கோவில் பணிகளை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. மேலும், வனப்பகுதியை யொட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் அதிகளவில் சேதம் ஏற்படுகி றது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்; அல் லது சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனர். அதற்கு பதிலளித்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, அதற்கான கருத்துருவினை அரசிடம் கொடுத்துள்ளோம். விரைவில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

புதுமைப்பெண்கள் விழா

புதுமைப்பெண்கள் விழா நாமக்கல், மார்ச் 6- திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் புதுமைப்பெண்கள் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி  நிறுவனங்களில், மகளிர் தினத்தை ஒட்டி பெண்களை முன்னி லைப்படுத்தும் வகையில், கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்க ளும், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனமும் இணைந்து நடத் திய, புதுமைப் பெண்கள் எனும் விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திட்ட  மேலாண்மை தலைவர் சக்திவேல் காளியப்பன், சம்மர் மோர் புட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் அலுவலர் தீபா முத்து குமார சுவாமி, சர்வர் கேக் நிறுவனத்தின் துணை  நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் நந்தினி அறிவரசன், ஏலோ நிறுவனத்தின் நிறுவனர் அபிராமி சந்தோஷ் ஆகியோர்  கலந்து கொண்டனர். சாதனைப் பெண்களை அறிமுகம் செய்யும் நோக்கிலும், வருங்கால சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தின் செயல் அலுவலர் அகிலா முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். கேஎஸ்ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  உதவி பேராசிரியர் பரீனா மேபல் விழாவிற்கு வரவேற்றார். நிகழ்வில் பங்கேற்ற சாதனைப் பெண்மணிகள் தங்களுடைய சொந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பெண்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

அரசு பேருந்து சேதம்: ஒருவர் கைது

அரசு பேருந்து சேதம்: ஒருவர் கைது சேலம், மார்ச் 6- ஆத்தூர் அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை சேதப் படுத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து, சிறை யில் அடைத்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, ஆத்தூ ருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த  பேருந்தை தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளை யத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (52) என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டி ருந்தனர். இந்நிலையில், அந்த அரசு பேருந்து நரசிங்கபுரத் தில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது, சாலையில்  நின்றிருந்த வாலிபர் ஒருவர், திடீரென பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்துள்ளார். உடனே பேருந்தை நிறுத்தி கிருஷ்ணன், பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் மேற் கொண்ட விசாரணையில் அவர், ஆத்தூர் வளையமாதேவி தெற்கு தெருவைச் சேர்ந்த அருண் (24) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது பொது சொத்திற்கு சேதம்  விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத் தனர்.

நீங்கள் நலமா திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

நீங்கள் நலமா திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு திருப்பூர், மார்ச் 6- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நீங்கள் நலமா திட் டத்தை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று நீங் கள் நலமா என்ற திட்டம் மூலம் பொது மக்களிடம் நேரடியாக  தொலைப்பேசி மூலம் கலந்துரையாடும் நிகழ்வினை சென் னையில் துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர்  மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், மகளிர்  உரிமைத் தொகை பெற்ற பெண்கள், இலவச பேருந்து பய ணம் செய்யும் பெண்கள், காலை சிற்றுண்டி உண்ணும்  மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரிடம் அமைச்சர் தொலைப்பேசி மூலம் திட்டம் குறித்தும், திட்டத்தின் பயன்கள் குறித்தும் முதல் கட்டமாக  7 நபரிடம் நீங்கள் நலமா மூலம் கேட்டறிந்தார் இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

மக்களுடன் மேயர்: பொதுமக்கள் சந்திப்பு

மக்களுடன் மேயர்: பொதுமக்கள் சந்திப்பு திருப்பூர், மார்ச் 6- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ்  மாநகராட்சி மேயர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட் டறிந்தார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன்  மேயர் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேயர் பொதுமக்களை அவ் வப்போது சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக் கைகளை கேட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதனன்று  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.என்.பி சுப்பிரமணிய நகர், செரங்காடு,  அமர்ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவாறு அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக் கைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த குறை களை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொ டர்ந்து அமர்ஜோதி நகர் பகுதியில் உள்ள குப்பைகளை தரம்  பிரிக்கும் மையத்தில் மேற்கொள்ளும் பணிகளையும் நேரில்  ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி னார்.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான  தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம்

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான  தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர், மார்ச் 6- திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் (இன்று) வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 3 மணி வரை மாவட்ட  ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு  தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் (இன்று) வியாழக் கிழமை காலை 10.30 மணி முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சிய ரக அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட  அரங்கம் அறை எண்.20ல் நடைபெற உள்ளது. இந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு  முகாமில் அனைத்து கல்வித் தகுதியுள்ள மாற்றுத்திறனா ளிகள் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவசதிறன் மேம் பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மகளிர் திட்ட அலுவல கத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கான பதிவு,  மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கிக்கடன் குறித்த வழிகாட் டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 35  க்கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கேற்றுப்  பணி நியமனம் வழங்க உள்ளனர் என்பதால் மாற்றுத்திறனாளி கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை

பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை கோவை, மார்ச் 6- நீர்நிலை புறம்போக்கு நிலங்ககளில் குப்பைகள் கொட்டி ஆக்கிரமிப்பு செய்தால், கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்த ரின் சரண்யா விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட  கிராமங்களில், நீர்நிலை புறம் போக்குகளில், குறிப்பாக பிஏபி வாய்க்காலில் குப்பைகள் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப் படுவதாக, விவசாயிகளிடமிருந்து இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் நீர்நிலை புறம்போக் குகளிலோ அல்லது அரசு புறம்போக்கு இடங்களிலோ குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால், தொடர்பு டைய உள்ளாட்சி நிர்வாகம் மூலம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது புகார்

ஈரோடு, மார்ச் 6- அந்தியூர் அருகே நில மோசடியில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், கருப்பண்ண உடையார் மகன்  நாச்சிமுத்து. மூத்த மகனான இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள். இவர்களுக்கு பூர்வீக பூமி அந்தியூர் தாலுகா எண்ணமங்கலம் கிராமத்தில் 6 ஏக்கர் இருந்தது. இதில் இவருக்கு பாத்தியமானது 1.5 ஏக்கர் பூமியைக் கேட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்  கலைவாணியின் கணவர் விஜயகுமார் என்பவர் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்  சிவ சேனாதிபதியை அணுகியுள்ளார். இவர் சொன்னபடி கிரயத்தில் கையெ ழுத்திட்ட நாச்சிமுத்திடம், மறுநாளே வீட்டை காலி செய்யச் சொல்லி தொந்த ரவு செய்ததாக தெரிகிறது. வீட்டைக் காலி செய்தால் தான் பணம் தர முடி யும் எனக் கூறியதால், உடனே, நாச்சி முத்தும் வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால், சொன்னபடி பணம் தர வில்லை. வழக்கறிஞர் சிவசேனாதிபதியிடம் சென்ற போது காசோலையைக் கொடுத்து அவர் சொல்லும் போது வங் கிக்கு சென்று பணம் பெற்றுக் கொள் ளும்படி சொன்னார். அதன் பிறகு  நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் வங் கிக்கும் செல்ல முடியவில்லை. நேரில்  சென்றும் பணமும் கேட்க முடிய வில்லை. உடல்நிலை சரியான பிறகு,  அவர்களைத் தொடர்பு கொண்டு நாச்சி முத்து பணம் கேட்டுள்ளார். பணம் தர முடியாது என மறுத்த விஜயகுமார், தனது மனைவி பாஜகவின் மாவட்டத் தலைவர் ஆன பின்பு உன்னை உண்டு  இல்லை என்று செய்து விடுவேன் என  நாச்சிமுத்துவை மிரட்டியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்ப டுகிறது. எனவே, தனது சொத்தை அபக ரித்து, கொலை மிரட்டல் விடுத்த நபர்  மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும். தனக்கு சேர வேண்டிய பணத்தை யும், வாழ்வாதாரத்தையும் காப்பாற் றிக் கொடுக்க வேண்டும் என பாதிக் கப்பட்ட நாச்சிமுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளார்.

கோவை புறநகரில் அண்ணா தொழிற்பூங்கா 30000 பேருக்கு வேலை – அமைச்சர் அன்பரசன்

கோவை, மார்ச் 6- கோவை புறநகரில் அமையவுள்ள அண்ணா தொழில் பூங்காவில், சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என  அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள் ளார். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைக்கப் பட்டு வரும் அண்ணா தொழில் பூங்காவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிட்டாம்பாளையம் கிராமத்தில் 316 ஏக்க ரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கடந்த  கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவ ரப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக அதிமுக  ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இங்கி ருந்த சிறு குறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசு ஆணை பிறப்பித்தது.  அதன் அடிப்படையில் 24 கோடி ரூபாய்  திட்ட மதிப்பீடு போடப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த தொழிற்பேட் டையில் உள்ள 585 மனைகளுக்கும், கனரக  வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகை யில் 26 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும்  1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள பணிகளுக்கு டெண்டர் விடப் பட்டு எல்லா பணிகளும் முடிந்த பிறகு, இன்னும் ஒரு ஆண்டில் முதல்வரை அழைத்து தொழிற்பேட்டையை திறக்க  திட்டமிட்டுள்ளோம். திட்டம் செயல் வடிவத் திற்கு வந்த பிறகு 10,000 பேருக்கு நேரடியா கவும் 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். சிறு குறு தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்குவதற்கு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றார்.

வனத்தைவிட்டு வெளியேறும் யானைகள்  வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

மே.பாளையம், மார்ச் 6- முன் கூட்டியே துவங்கிய கோடை வெயில் காரணமாக  வனத்திற்க்குள் ஏற்பட்ட வறட்சியால், நீராதாரங்களை தேடி  காட்டு யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும் என்ப தால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்க வனத்துறை  அறிவுறுத்தியுள்ளது.  கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளை யம் வனச்சரக பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்  அதிகரித்து வருவதால் காட்டினுள் இருந்த இயற்கையான நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இது போன்ற வறட்சி காலங்க ளில் யாணை உயிர் வாழ ஒரு நாளைக்கு குறைந்தபட் சம் 150 முதல் 200 லிட்டர் நீர் தேவைப்படும். இதனால்,  காட்டினுள் வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தண்ணீர்  தொட்டிகளை தேடி காட்டு யானைகள் வர துவங்கியுள்ளன.  இதற்காக மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையை அடிக் கடி காட்டு யானைகள் கடந்து செல்வதால் இவ்வழியே  பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளது. பகல், இரவு என எந்த  நேரத்திலும் யானைகள் இச்சாலையை கடந்து செல்லும்  என்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவ னத்துடன் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும்  சாலையை கடக்க முயலும் யானைகளை தொந்தரவு  செய்யாமல் பாதுகாப்பான தூரத்தில் அமைதியாக காத்திருந் தால் யானைகள் சென்று விடும் என அறிவுறுத்தியுள்ளனர்.