districts

img

வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்வு: வியாபாரிகள் தகவல்

ஈரோடு, செப்.14- ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்ந் துள்ளது.  ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்கா லிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி காய் கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சில்லரை வியாபாரமும், மொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒட்டன்சத்தி ரம், மேச்சேரி, தாளவாடி, உதகை, மேட்டுப்பாளையம், ஆந் திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற் பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், பல் வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக காய் கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.  கடந்த வாரத்தை காட்டிலும், காய்கறிகளின் விலை உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100  வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100 வரை விற்பனையானது.

;