districts

img

தீபாவளி போனசை முன்கூட்டியே வழங்கிடு விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அவிநாசி,செப்.11- அவிநாசி அருகே வஞ்சி பாளையத்தில் திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாக விசைத்தறி தொழில் பெறும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் நூல்  விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பெரும் போராட்டங்களுக்கு பின்பு ஓரளவு குறைந்த நிலையில், தற் பொழுது பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.15  ஆயிரம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால்  தொழில் நெருக்கடியும், தொழிலாளர் களுக்கு வேலையிழப்பும் உருவாகி யுள்ளது. இதில் ஒன்றிய அரசும், மாநில அரசு  உடனடியாக தலையிட்டு பஞ்சு நூல் விலை  உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விசைத் தறி தொழிலாளிகளுக்கு 20 நாட்களுக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி  தொழிலாளர் சங்கத்தினர் வஞ்சி பாளை யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளன மாநிலத் தலைவர்  பி.முத்துசாமி, திருப்பூர் மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட  நிர்வாகிகள் வேலுச்சாமி, வி.மோகன சுந்தரம், ஆர்.பழனிச்சாமி, முருகன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.