சென்னை, மார்ச் 17- அம்பத்தூர் கள்ளி குப்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள் வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காரல் மார்க்ஸ் குறித்து தவறாக பேசியதைக் கண்டித்தும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பத்தூர் கொரட் டூர் சந்திப்பில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை போராட்டத்தில் பங்கேற்க கட்சித் தொண்டர்கள் அங்கு வரத் தொடங்கினர். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு முன்பே காவல் துறையினர் தீவிர வாதிகளை கைது செய்வது போல் விரட்டி விரட்டிச் சென்று கைது செய்தனர். கட்சிக் கொடிகளை வலுக்கட்டாயமாக கைகளில் இருந்து பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து எல்.சுந்தரராஜன் கூறுகையில், ஆர்ப்பாட்டம் துவங்கு வதற்கு முன்பே போராட்டக் காரர்களை ஒன்றுகூட விடமால் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். ஜனநாயக பூர்வமான ஒருபோராட் டத்தை முறைப்படி அறிவித்து துவங்குவதற்கு முன்பே காவல் துறை யினரின் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதை வன்மையாகக் கண்டிக்கி றோம் என்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், ஏ. விஜய குமார், கே.எஸ்.கார்த்திஷ் குமார், எல்.பி.சரவணத் தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.செல் வராஜ், கமலநாதன், ஆர்.கோபி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், நிர்வாகிகள் பி.என்.உன்னி, சு.பால்சாமி, இ.பாக்கியம், ஜி.மூர்த்தி, ஏ.ராயப்பன், சந்திரன், சிங்கராஜ், கேசவன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோட்டீஸ்வரி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் காவியா, சிபிஎம் அம்பத்தூர் பகுதி குழு உறுப்பினர்கள் சீனி வாசன், வீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பகுதி செயலாளர் இப்ரா ஹிம், துணை செயலாளர் கள் குமார், குட்டி, அந்தோணி, மதிமுக பகுதிச் செயலாளர் மா தாமோ தரன், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆனந்த், பழனி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருவள்ளூர் மாவட்ட செய லாளர் ஆவடி நாகராஜ், தமிழர் விடுதலைக் கழகம் மாநில அமைப்பாளர் சௌ.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.