districts

img

சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக்கோரி மனு

சேலம், பிப்.21- சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனு மதி அளிக்க வேண்டும் வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று ஆட்டோ தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், சேலம் மாவட்டத் தில் டீசல், பெட்ரோல் ஆட்டோக் களுக்கு கடந்த 2011 வரை மட்டுமே சேலம் மாவட்டத்தில் பர்மிட் அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர், கடந்த 13 ஆண்டு காலமாக பர்மிட் அனுமதி தரவில்லை. தற்போது நாடு முழு வதும் ஒன்றிய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி வாகனங்களுக்கு முன்னு ரிமை கொடுத்து அனுமதி அளித்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி அனுமதி மறுத்து வருகின் றனர். பெட்ரோல், டீசல் விலை உயர் வின் காரணமாக ஆட்டோக்களை இயக்க முடியாத சூழ்நிலை உள் ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் முதல் அடிவாரம், பழைய பேருந்து  நிலையத்திலிருந்து அயோத்தி யாபட்டினம், அம்மாபேட்டை, சீல் நாயக்கன்பட்டி, கொண்டலாம் பட்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரி மையாளர்கள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றதால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மைலேஜ் பிரச்சனையால் கடு மையான பாதிப்பு ஏற்படுகிறது. இதி லிருந்து தப்பித்து மாற்று வழியை நோக்கி ஆட்டோ தொழிலாளர் கள் நகரத் துவங்கியுள்ளனர். குறிப் பாக, சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு மாறத் துவங்கியுள்ளனர். ஆனால், சேலம் மாவட்டத்தில் சிஎன்ஜி ஆட் டோக்களுக்கு முழுமையான அனு மதி மறுக்கப்படுகிறது. சுற்றுச்சூழ லுக்கு ஏற்ற சிஎன்ஜி ஆட்டோக்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் ஓலா, ஊபர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் இயக்கப்படும் ஆட்டோக்களால் ஆட்டோ தொழில் முழுமையாக பாதிப்படைந்துள் ளது. இதனை தடுத்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும். அரசு மீட்டர் கட்ட ணத்தை முறையாக நடைமுறைப் படுத்த வேண்டும். சிஎன்ஜி ஆட் டோக்களை மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.