districts

img

ஊக்க ஊதிய உயர்வுத்தொகை கேட்டு மனு

தருமபுரி, மார்ச் 13- ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய ஊக்க ஊதிய உயர்வுத்தொகையை உடனடியாக வழங்க  வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித் தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங் களில், அமைப்பாளராகவும், அதிலிருந்து மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற வர்களுக்கு, சுமார் 10 ஆண்டு முதல் 30 ஆண்டு காலம் வரை பணியாற்றியவர்களுக்கு, பணி காலத்திலேயே ஊக்க ஊதிய உயர்வுத் தொகை வழங்க வேண்டும். ஆனால், பணி யாற்றி ஓய்வுபெற்று 10 ஆண்டுகாலமாகியும் வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு பணிக்காலத்தில் வழங்கவேண்டிய ஊக்க  ஊதிய உயர்வுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் ளது.