districts

img

தெருநாய்களால் மக்கள் அச்சம்

நாமக்கல், பிப்.2- பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தமாக 21 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதி முழுவதும் ஏராளமான கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள், மாலை நேர சாலையோர கடைகள், உணவகங்கள் என அதி களவு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இறைச்சி கடை களில் இருந்து வீசப்படும் கழிவுகளை உண்பதற்காக, கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. ஒரு சில நேரங் களில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் அவ்வழியே செல்வோரை சில நேரங்களில் கடித்து விடுகிறது. இதனால்  அவ்வழியே செல்லும் பெண்கள், குழந்தைகள், பள்ளி செல் லும் மாணவ, மாணவியர் ஆகியோர் அச்சத்துக்கு உள்ளாகி  வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய  நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி  செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.