districts

img

40 ஆண்டுகளாக நீடிக்கும் சாலை, சாக்கடைப் பிரச்சனை: நிரந்தரத் தீர்வு காண சிபிஎம் தலைமையில் மக்கள் மனு

திருப்பூர், பிப்.21– திருப்பூரில் 40 ஆண்டுகளாக தீராத  தலைவழியாக நீடிக்கும் பாப்பநாயக் கன்பாளையம் சாலை மற்றும் சாக்க டைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு  காணக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமையில் அப்பகுதி மக் கள், மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்  கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பாப்பநாயக்கன்பாளையம் கிளையின் தலைமையில் அப்பகுதி மக்கள், வெள் ளியன்று இரண்டாவது மண்டலத் தலை வர் தம்பி கோவிந்தராஜை சந்தித்தும்,  மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு  அளித்து வலியுறுத்தினர். இதில், திருப்பூர் மாநகராட்சி 18 ஆவது வார்டு கட்டபொம்மன் நகரில்  இருந்து 6ஆவது வார்டு கவுண்டநாயக் கன்பாளையம் வரை செல்லும் பாப்பநா யக்கன்பாளையம் பிரதான சாலை  சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்த  முடியாத நிலையில் உள்ளது. இங்கு, பல  ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை சீர்குலைந்து வழியெங்கும் குண்டும், குழியுமாக உள்ளது. அத்து டன் சாக்கடைக் கழிவுநீரும், பாதாளச்  சாக்கடை மலக்கழிவுநீரும் வெளியேறி  சாலையில் குளம் போல் தேங்கியுள் ளது. நில அமைப்பின் காரணமாக இப்ப குதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால் வாயிலும் சாக்கடை நீர் வெளியேறிச் செல்ல வழியின்றி, ஆண்டுக்கணக்கில் தேங்கியிருக்கிறது. குப்பைகூளங்க ளும், பிளாஸ்டிக் கழிவுகளும் அடைத்து, பாதாளச் சாக்கடை மூடி  திறந்த நிலையில், கழிவுநீர் வெளியேறி  சுற்றிலும் குளம் போல் தேங்கியிருக் கிறது. இந்த வட்டாரத்தில் 30 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். ஏராளமான சிறு, குறு தொழில்  நிறுவனங்களும் உள்ளன. சுற்று வட்டா ரத்தில் பல நூறு குழந்தைகள் படிக்கக் கூடிய பள்ளிக்கூடங்களும் உள்ளன.  குறிப்பாக, கடந்த 70 ஆண்டுகளாகச்  செயல்பட்டுவரும் பாப்பநாயக்கன் பாளையம் பள்ளிக்கூடத்திற்குச் செல் லும் வீதியும் பாதிப்படடைந்து ஆபத் தான நிலையில் உள்ளது. ஊத்துக்குளி சாலை மண்ணரை, பாளையக்காடு, என்.ஆர்.கே.புரம், முத்து நகர் உள்ளிட்ட கொங்கு நகரின்  கிழக்குப் பகுதியில் இருந்து இந்த  சாலையின் வழியாக, நெருப்பெரிச்ச லில் உள்ள சார்பதிவாளர் அலுவல கத்திற்கு ஏராளமானோர் செல்கின்ற னர். தூசுகளால் புகை மண்டலம் போல்  உருவாகி குழந்தைகள், பெண்கள், வய தானவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படு கிறது. சுவாசம் சார்ந்த நோய் தாக்குத லுக்கு ஆளாகிறார்கள். இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல  முறை மனுக் கொடுத்தும் பிரச்சனை தீர வில்லை, நிரந்தரத் தீர்வு காணப்பட வில்லை. பாதாளச் சாக்கடை கழிவுநீர் வடி காலை முழுமையாக அமைத்து புதி தாக தார்ச்சாலை அமைத்து நிரந்த ரத்தீர்வு காண வேண்டும் என கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பா. சௌந்தரராசன், மாநகரக்குழு உறுப்பி னர்கள் என்.மனோகரன், என்.சண்மு கம், பா.ராஜேஷ் உள்பட பெண்கள்  உள்ளிட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.  மனுவை பெற்றுக் கொண்ட இரண்டா வது மண்டலத் தலைவர் நிரந்தரத் தீர்வு  காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்தார்.