districts

img

பி.ஆர்.நடராஜன் எம்பி., மக்கள் சந்திப்புப் பயணம்

திருப்பூர், நவ.25 - பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டும னைப் பட்டா, குடிநீர், நூறு நாள் வேலை என வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனைகள் தொடர் பாக சாமானிய மக்கள் ஏராளமானோர் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் முறையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெள்ளியன்று பல்லடம் ஒன்றியத்திற்குட் பட்ட ஊராட்சிகள் மற்றும் பல்லடம் நகராட் சியில் மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொண் டதுடன், அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். சித்தம்பலம் ஊராட்சி, வடுகபாளையம் புதூர் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி, கரைப்புதூர் மற்றும் ஆறுமுத்தாம்பாளை யம், 63 வேலம்பாளையம், பூமலூர், மாணிக் காபுரம் ஆகிய ஊராட்சி மன்ற அலுவலகங் கள் மற்றும் பல்லடம் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் அவர் மக்களை சந்தித்து  கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண் டார். சித்தம்பலம் ஊராட்சியில் மாற்றுத்திற னாளி சின்னப்பட்டான் என்பவருக்கு, ஊராட்சி ஒன்றியத் தலைவர் தனது சொந்த நிதியில் வாங்கி கொடுத்த மூன்று சக்கர வண்டியை பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் வழங்கினார். மேற்கண்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பொது மக்கள் வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு அளித்தனர். அதே போல் நூறு நாள் வேலை திட்டத்தில் முழுமை யாக வேலை வழங்கவும் கேட்டுக் கொண்ட னர்.

ரேசன் கடைகளில் தரமான அரிசி மற்றும் கார்டுதாரர்களுக்கு உரிய அளவு மண்ணெண் ணெய் வழங்க வேண்டும், பல்வேறு கிராமப் புற பகுதிகளில் கொரோனா பொது முடக்கக் காலத்துக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பள்ளி  செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர் கள், பெண்கள், முதியோர் போக்குவரத்து வசதி இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பேருந்து வசதியை தொடர நடவ டிக்கை எடுக்க வேண்டும், கரைப்புதூர் ஊராட் சியில் சேகரமாகும் குப்பையை மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கணபதிபாளையம், ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிகளில் பல ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள்  சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண் டும். குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடிப்படை வாழ்வாதா ரம் தொடர்பான ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த பயணத்தின்போது உடன் வந்த சமூக நலத்திட்ட தனி வட்டாட்சியர் தமிழ்ச் செல்வன், பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணை யர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்கள்  கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நடவ டிக்கை எடுக்க பி.ஆர்.நடராஜன் எம்.பி. அறி வுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது பல்லடம் ஊராட்சி  ஒன்றியத் தலைவர் தேன்மொழி, துணைத்  தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன் சிலர் ராஜேந்திரன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளரும், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவருமான சோமசுந்தரம், மேற்கு  ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம்  ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் வை.பழனிச்சாமி, எஸ்.முருகசாமி, வாலிபர் சங்கச் செயலா ளர் சி.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பல்லடம் நகராட்சித் தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார், துணைத் தலைவர் நர்மதா இளங்கோவன் உள்பட நகராட்சி கவுன் சிலர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர்  பல்லடம் நகரத்தில் பங்கேற்றனர். பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை அவர் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட் டறிந்தார். முன்னதாக கரைப்புதூர் ஊராட்சி குன் னாங்கல்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மறைந்த  மூத்த தோழர் பைசன் முத்துச் சாமி உருவப்படத்தை எம்.பி. பி.ஆர்.நடரா ஜன் திறந்து வைத்தார். கிராம ஊராட்சிகளில் ஊராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர் கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொது  மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.