திருப்பூர், ஜூன் 27- 60 வயதான அனைத்து முதியோருக் கும் வறுமைக்கோடு பட்டியல் குறித்த விப ரம் கேட்காமல் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு கோரியுள்ளது. பல்லடம் மைதிலி சிவராமன் நினைவரங் கில் மாதர் சங்கத்தின் 16ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இம்மாநாட் டில் மாநிலத் துணைத் தலைவர் ஜி. சாவித்திரி சங்கக் கொடியேற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி தலைமை ஏற்றார். வரவேற்புக்குழுத் தலைவர் வை. பழனிசாமி வரவேற்றார். மாநாட்டைத் தொடக்கி வைத்து மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி வேலை அறிக்கையையும், பொருளாளர் ஏ.ஷகிலா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கிரிஜா, சட்ட உதவி மைய வழக்கறிஞர் எஸ்.ஏ.தமயந்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ. மணிகண்டன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் திருப்பூர் மாவட்டத் தின் அனைத்து பகுதிகளிலும் பொது மக்க ளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும், அரசு நலத் திட்ட உதவிகளை தகுதி உள்ள அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும், 60 வயதான முதியோருக்கு வறு மைக்கோட்டுப் பட்டியலில் பெயர் இருக்கி றதா என்று கேட்காமல் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் குளறுபடி களைக் களைந்து அனைவருக்கும் அத்தி யாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறு திப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் மாதர் சங்க மாவட்டத் தலைவராக எஸ்.பவித்ராதேவி, மாவட்டச் செயலாளராக கு.சரஸ்வதி, மாவட்டப் பொருளாளராக ஆர்.கவிதா மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்களாக ஜி. சாவித்திரி, ஆர்.மைதிலி, எஸ்.பானுமதி, அ. ஷகிலா, மாவட்டத் துணைச் செயலாளர்க ளாக ஈ.வளர்மதி, பா.லட்சுமி, சி.பானுமதி, செல்வி ஆகியோர் உள்பட மொத்தம் 29 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. முடிவில் மாநாட்டை நிறைவு செய்து வைத்து சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பி னர் வி.பிரமிளா உரையாற்றினார். மாவட் டம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறைவில் டி.பரிமளா நன்றி கூறினார்.
பேரணி, பொதுக்கூட்டம்
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இருந்து மாபெரும் மாதர் பேரணி நடைபெற் றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பிரதான சாலை வழியாக என்ஜிஆர் சாலை பிருந்தா நினைவுத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சங்கத் தலைவர்கள் உரையாற்றினர்.