districts

img

பிடிஎம் நிறுவன உரிமையாளர் கைது: பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு

திருப்பூர், மே 29- பண மோசடி செய்த பிடிஎம் நிறுவ னத்தின் உரிமையாளரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி திருப்பூர்  காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புதனன்று  மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள்  கூறுகையில், திருப்பூர் மாவட்டம் காங் கேயம் தாலுகா முத்தூர் பகுதியை மையமாகக் கொண்டு தீபக் திலக் என்ப வரது தலைமையில் பிடிஎம் என்ற நிறுவ னம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம்  முதலீடு செய்யும் பணத்திற்கு மும்மடங் காக பணம் தருவதாக கூறி விளம்பரப் படுத்தினர். இதற்காக கோவையில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி கூட் டம் நடத்தி பல்வேறு சலுகைகள் குறித்து  விளம்பரப்படுத்தினர். இதனை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உட் பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் 2,000 ரூபாய் முதல்  2 லட்சத்து 56 ஆயிரம் வரை முதலீடு செய் தனர். 2023 ஆம் ஆண்டு முதலீடு செய்த வர்களுக்கு ஒரு சில மாதங்கள் கூறி யபடி பணம் திரும்ப கிடைத்தது. அதற் குப் பிறகு பணம் கிடைக்கவில்லை. அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது பூட்டப்பட்டிருந்தது. தொலைபே சியில் அழைத்தபோதும் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அந் தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங் களில் புகார் அளித்தோம். இந்நிலையில்  செவ்வாயன்று பிடிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் திலக் சேலத்தில்  பொதுமக்களால் பிடித்து காவல் நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று  தெரிய வந்தது. இதையடுத்து சேலம் சென்றபோது திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்து  விட்டதாக தெரிவித்தனர். இதைதொ டர்ந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக் கப்பட்ட மக்கள் மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளில் இங்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் புகார் மனு அளித்துள்ளோம் என  தெரிவித்தனர். மேலும், தீபக் திலக் கோடு தொடர்புடைய சதீஷ்குமார், ஜெயக்குமார்,  வனிதா ஜெயக்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி உள்ளனர்.

;