திருப்பூர், மே 13- பல்லடம் அரசு மேல்நி லைப் பள்ளியில் 1992- 94 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்க ளின் சந்திப்பு நிகழ்ச்சி, 30 ஆம் ஆண்டு முத்து விழா வாக நடைபெற்றது. பல்லடம் அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். தங்களுடைய பள்ளிக்கால நினைவுக ளையும், தற்போதைய தன்னுடைய குடும்பம், தொழில் குறித்தான பல்வேறு விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இன்றைய சூழ்நிலைமையில் பொரு ளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிற கல்வி கற்பதற்கு சிரமப்படுகிற மாணவ, மாணவி களுக்கு உதவி செய்வது எனவும் முடிவெ டுத்தனர். காலை முதல் மாலை வரை பள்ளி வளா கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தங்களுடன் படித்த மருத் துவர் கோவிந்தராஜ், உடல் நலம் குறித்தும், நோய் வருமுன் பாதுகாப்பது குறித்தும் கருத்துரைத்தார். அதேபோல ஸ்ரீதேவி என் பவர், குழந்தைகள் பெரியவர்களுக்கான சரும பாதுகாப்பு குறித்து பல்வேறு குறிப்பு களை வழங்கினார். பங்கேற்ற அனைவ ருக்கும் மிகுந்த பயனுள்ள வகையில் நிகழ்ச் சிகள் அமைந்திருந்தன, பள்ளி வளாகத்தில் தங்களுடைய பழைய கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டு பிரிய மனம் இல் லாமல் விழாவை நிறைவு செய்து அனை வரும் கலைந்து சென்றனர்.