districts

img

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 31- இஸ்ரேல் அரசின் இனப் படுகொலை களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரம் பேர் இத்தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பகுதி பெண்களும், குழந்தைகளும் என்பது உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள் ்ளது. இஸ்ரேலின் பாசிச வெறி உச்சத்தில் ஏறி, மருத்துவமனைகள், உணவு கூடங்கள், பள்ளிக்கூடங்கள்  ஆகியவற்றின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.  சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்தச்  சொல்லியும் இஸ்ரேல் அரசு தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் அரசின் இனப் படுகொலைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீ னத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, பிபி பழனிச்சாமி, சி.பரமசிவம், ஏ.எம். முனு சாமி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரம ணியன், சி.முருகேசன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ரஃப்பாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

;